search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுச் சான்றிதழ்"

    • 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்
    • பிள்ளைகளின் மாற்று சான்றிதழை வாங்க பள்ளி வளாகத்திற்கு வந்தனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கந்தாடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் மாண வர்களுக்கு ஆசிரியர்கள் முறையாக பாடம் கற்பிக்கவில்லை. இதனால் மாணவர்கள் பள்ளி நேரத்திலேயே வெளியில் வந்து விளையாடுகின்றனர் என கடந்த சில தினங்களுக்கு முன் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறினர்.

    ஆனால், பள்ளி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளா மல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பெற் றோர்கள் தங்களது பிள்ளைகளின் மாற்று சான்றிதழை வாங்க பள்ளி வளாகத்திற்கு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த பள்ளியின் கல்வி மேலாண்மை குழு நிர்வாகி கள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களின் பெற் றோர்கள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் நாங்கள் மாணவர்களுக்கு முறையாக தான் பாடம் சொல்லிக் கொடுக்கிறோம், எங்கள் மீது என்ன தவறு உள்ளது என்றார். அப்போது அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் எங்கள் பிள்ளைகள் முறையாக படிக்க வேண்டும் என்றால் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் முறையாக பாடம் கற்பிக்காத ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்கள் பிள்ளைகளின் மாற்று சான்றிதழை கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் சேர்த்து விடுகிறோம் என கோரிக்கை வைத்தனர்.

    இதனைக் கேட்ட பள்ளியின் மேலாண்மை குழு நிர்வாகிகள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த மாண வர்களின் பெற்றோர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இச்சம்ப வத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×