search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாருதி ஆல்டோ K10"

    மாருதி சுசுகி நிறுவனம் புதிய பாதுகாப்பு வசதிகளுடன் மாருதி ஆல்டோ K10 காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #MarutiAltoK10



    இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவில் மேம்பட்ட ஆல்டோ K10 காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார் AIS-145 ரக பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் புதிய ஆல்டோ K10 விலை ரூ.3.65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ.4.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் AIS-145 ரக பாதுகாப்பு விதிகள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கார்களில் ஏ.பி.எஸ். இ.பி.டி., டிரைவர் ஏர்பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், சீட்-பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம் மற்றும் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    முன்னதாக ஆல்டோ K10 காரில் டிரைவர் ஏர்பேக் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்பட்டிருந்தது. புதிய பாதுகாப்பு விதிகள் தவிர புதிய ஆல்டோ K10 காரில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் மாருதி ஹேட்ச்பேக் கார் 988-சிசி, 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. 



    இந்த என்ஜின் 67 பி.ஹெச்.பி. பவர் @6000 ஆர்.பி.எம்., 90 என்.எம். டார்க் @3500 ஆர்.பி.எம். செயல்திறன், 5-ஸ்பீடு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது. மாருதி ஆல்டோ K10 கார் லிட்டருக்கு 24.07 கிலோமீட்டர் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் AIS-145 ரக பாதுகாப்பு வசதி பெறும் முதல் மாருதி கார் மாடலாக ஆல்டோ K10 இருக்கிறது. சமீபத்தில் மாருதி சுசுகி நிறுவனம் தனது இகோ வேன் மாடலை அப்டேட் செய்திருந்தது. இதிலும் புதிய பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தது. 

    தற்சமயம் மாருதி ஆல்டோ K10 மாடலில் வழங்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு வசதிகள் மார்ச் 31, 2020 வரை இந்தியாவில் விற்பனை செய்ய முடியும். இதன் பின் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் பி.எஸ். VI ரக எமிஷன் விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
    ×