search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாயூரநாதர்"

    • திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார்.
    • சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் கோவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல்கள் பாடல் பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாத கடை வெள்ளியை முன்னிட்டு அபயாம்பிகை நற்பணி மன்றம் சார்பில் லட்சதீப திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அந்த வகையில் 35ம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி அம்பாள் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்விக்கப்பட்டது. திருவாவடுதுறை ஆதீன 24வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் குத்து விளக்கு ஏற்றி லட்சதீபத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து மகா தீபாரதனை கான்பிக்கப்பட்டது. சுவாமி சன்னதி அம்பாள் சன்னதி வெளி பிரகாரம் சுற்றுப் பகுதி உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் லட்ச தீபங்களை ஏற்றினர்.

    ரிஷபக் குஞ்சரம் 75வது சுதந்திர கொடியை விநாயகர் ஏற்றுவது போன்று வரைந்த ஓவியங்கள் மற்றும் பலவிதமான மந்திர எழுத்துக்கள் தீப ஒளியில் பிரகாசித்தது பக்தர்களை கவர்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று விளக்குகளை ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் கணேசன், கேசியர் வெங்கடேசன், ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×