search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாதிரித்தேர்வு"

    • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
    • குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.அக்டோபர் 30 ந் தேதி நடக்க உள்ள, அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -1 தேர்வுக்கான பயிற்சி ஒரு மாதமாக நடந்து வருகிறது.பயிற்சி பெறும் மாணவ, மாணவிகளை தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில், மாதிரித்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாரம் தோறும் நடத்த அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

    குரூப் -1 தேர்வு எழுதுவோருக்கான முதல் மாதிரித்தேர்வு சமீபத்தில் நடந்தது. பயிற்சி பெற்று வரும் 148 பேர் மாதிரி தேர்வு எழுதினர். கடந்த தேர்வுகளில் வழங்கிய, கேள்வித்தாள்களை கொண்டு, தேர்வு நடத்துவதன் வாயிலாக பயிற்சி மாணவர் அதிகம் பயன்பெறுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • சுமார் 300 மாணவர்கள் இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
    • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    செங்கோட்டை:

    செங்கோட்டை நூலகம் மற்றும் ஆகாஷ் அகாடமி சார்பில் மாதிரி டி.என்.பி.எஸ்.சி. தேர்வு செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    நன்னுலகர் ராமசாமி வரவேற்றார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாதிரித் தேர்வை தொடங்கி வைத்தார். சுமார் 300 மாணவர்கள் இந்த டி.என்.பி.எஸ்.சி. மாதிரித் தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். இதன் நிறைவாக தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 இளைஞர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு குறித்து ஆகாஷ் அகாடமி நிர்வாகி மாரியப்பன் செந்தில் மற்றும் வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளையும் அறிவுரைகளையும் விளக்கிக் கூறினர். தண்டழ்தாசன் சுதாகர் நன்றி கூறினார்.

    ×