search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் மீட்பு"

    • காட்பாடி அரசு விடுதியில் இருந்து மாயம்
    • கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைப்பு

    வேலூர்:

    காட்பாடி செங்குட்டையில் அன்னை சத்தியபாமா அரசினர் விடுதி உள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற பெண் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவர்கள் காட்பாடியில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற 8 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை.

    இதுகுறித்து விடுதி காப்பாளர் சாந்தி காட்பாடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவகளை தேடி வந்தனர்.

    மாணவிகள் நேற்று மாலை வேலூர் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரிந்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரிய வந்தது.

    உடனடியாக விரைந்து சென்ற போலீசார் 2 மாணவிகளையும் மீட்டனர். மாணவிகளை காட்பாடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மீண்டும் அரசு விடுதியில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாக தெரிவித்தனர்.
    • மாணவிகள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    போரூர்:

    கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 10.30மணி அளவில் 2 சிறுமிகள் வழிதெரியாமல் சுற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும் அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருவதும் தெரியவந்தது.

    தாய்-தந்தையை இழந்த மாணவிகளை பெங்களுரில் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பஸ்நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்தனர்.

    மேலும் மாணவிகள் தாங்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று போலீசாரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து மாணவிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்கள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • இளம்பெண்கள் உள்பட 4 பேர் தண்ணீரில் சிக்கி தத்தளித்தனர்.
    • அலையின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கற்கள் அதிகம் கொட்டப்பட்டு இருந்ததாலும் மீனவர்களால் கடலுக்குள் இறங்க முடியவில்லை.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், கே.வி. கே.குப்பம் கடற்கரை பகுதியில் மாலை நேரங்களில் சுற்றி உள்ள பொதுமக்கள் ஏராளமானோர் வந்து பொழுதை கழித்து செல்வது வழக்கம். விடுமுறை நாளான நேற்று மாலை 3 இளம்பெண்கள் உள்பட 4 வாலிபர்கள் கே.வி.கே.குப்பம் கடற்கரை பகுதிக்கு வந்தனர்.

    அவர்கள் கரையோரத்தில் கற்கள் குவிக்கப்பட்டு உள்ள இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். பின்னர் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலை இளம்பெண்களை கட லுக்குள் இழுத்து சென்றது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர்.

    ஆனால் அலையின் சீற்றத்தால் அவர்களும் கடலுக்குள் இழுத்துச்செல் லப்பட்டனர். 2 இளம்பெண்கள் உள்பட 4 பேர் தண்ணீரில் சிக்கி தத்தளித்தனர். அலையின் சீற்றம் அதிகமாக இருந்ததால் அவர்களால் நீந்தி கரைக்கு வர முடியவில்லை. கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்க தொடங்கினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அப்பகுதி மீனவர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அலையின் வேகம் அதிகமாக இருந்ததாலும், கற்கள் அதிகம் கொட்டப்பட்டு இருந்ததாலும் மீனவர்களால் கடலுக்குள் இறங்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து வலைகள் மற்றும் கயிறுகளை கடலுக்குள் வீசி தண்ணீரில் தத்தளித்தவர்களை மீட்க முயன்றனர். இதிலும் சிரமம் ஏற்பட்டது. அலையின் வேகத்தால் கயிறுகளை அவர்கள் அருகில் வீச முடியவில்லை. நீண்ட நேர போராட் டத்துக்கு பின்னர் கடலில் மூழ்கிய இளம்பெண்கள் உள்பட 4 பேரையும் மீனவர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர்கள் ஆபத்தான நேரத்தில் உதவிய மீனவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்கள் கல்லூரி மாணவ, மாணவிகள் என்று தெரிகிறது. கடலில் மூழ்கியவர்களை வலை, கயிறு கட்டி மீனவர்கள் மீட்டுகும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • மாயமான மாணவிகளை விரைந்து முடிக்க கோரி கார்த்திகாவின் பெற்றோர் நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலத்தில் புகார் மனு கொடுத்தனர்.
    • மாணவிகள் மதுரையில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே உள்ள பண்டாரபுரத்தை சேர்ந்தவர் அச்சுதன். இவரது மகள் கார்த்திகா (வயது 19). இவர் சாத்தான்குளம் அரசு கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இதே கல்லூரியில் படித்து வருபவர் சாத்தான்குளம் அருகே உள்ள கொழுந்தட்டு மேலத்தெருவை சேர்ந்த ராபர்ட்செல்வன் மகள் எப்சிபா செல்வகுமாரி (வயது 20).

    இந்நிலையில் கடந்த 23-ந் தேதி மாணவிகள் இருவரும் திடீரென மாயமானார்கள். அவர்களை தொடர்பு கொண்டபோது செல்போன் சுட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதுதொடர்பாக அச்சுதன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் விசாரணை நடத்தி வந்தார்.

    இதற்கிடையே மாயமான மாணவிகளை விரைந்து முடிக்க கோரி கார்த்திகாவின் பெற்றோர் நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலத்தில் புகார் மனு கொடுத்தனர்.

    இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் மாணவியின் செல்போன் சிக்னலை கொண்டும் தீவிரமாக தேடி வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் விருதுநகர், சங்கரன்கோவில், மதுரை பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவிகள் மதுரையில் உள்ள விடுதியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் அங்கு சென்று மாணவிகளை மீட்டு சாத்தான்குளம் அழைத்து வந்தனர்.

    • கரூர் பஸ் நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.
    • சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே உள்ள மகளிர் பள்ளியில் செல்லாண்டியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த 2 மாணவிகள், நந்தவனப்பட்டி, சென்னமநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவிகள் என 4 பேரும் 8ம் வகுப்பு படித்து வந்தனர். நெருங்கிய தோழிகளான இவர்கள் 4 பேரும் நேற்று காலை வழக்கம் போல் வீட்டில் இருந்து பள்ளிக்கு வந்தனர்.

    ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவர்களது பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். ஆனால் அவர்கள் 4 பேரும் நேற்று பள்ளிக்கே வரவில்லை என ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அந்த வகுப்பு மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

    ஆனால் அவர்களும் தங்களுக்கு தெரியாது என தெரிவித்து விட்டனர். இரவு வரை வீடு திரும்பாததால் அவர்கள் கடத்தப்பட்டார்களோ என்ற அச்சத்தில் மாணவிகளின் பெற்றோர்கள் நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் திரண்டு வந்து புகார் அளித்தனர்.

    ஆனால் மாணவிகள் 4 பேரும் கரூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த மாவட்ட போலீஸ் எஸ்.பி. மூலம் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கரூர் பஸ் நிலையத்தில் இருந்த 4 மாணவிகளையும் திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்திக் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் மீட்டு வந்தனர்.

    இதுகுறித்து மாணவிகளிடம் விசாரித்ததில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தாங்கள் எங்காவது வெளியே செல்லலாம் என முடிவெடுத்ததாகவும் அதன்படி 4 பேரும் பழனி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாகவும் கூறினர். அதன் பிறகு திண்டுக்கல் செல்வதற்காக பழனி பஸ் நிலையத்திற்கு வந்தபோது திண்டுக்கல்லுக்கு பஸ் இல்லாததால் அங்கிருந்த கரூர் பஸ்சில் ஏறியதாக கூறினர்.

    பின்னர் வழி தெரியாமல் தவித்த தங்களுக்கு அங்கிருந்த போலீசார் உதவி செய்து அனுப்பி வைத்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 4 மாணவிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவிகள் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறும்போது சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து அவர்கள் எடுத்து கூறினர்.

    இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுரைகள் கூறி அவர்களை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் மாணவிகளின் பெற்றோர்களும் நிம்மதியடைந்தனர்.

    • சிறுமிகளை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
    • விடுதி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் நண்பர்களான 3 பேரும் பஸ் மூலம் புறப்பட்டு கோயம்பேடு வந்தது தெரியவந்தது.

    போரூர்:

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் நள்ளிரவு 12 மணி அளவில் 3 சிறுமிகள் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்தனர்.

    இதை கண்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உடனடியாக பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் குணசேகரன் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராஜ் ஆகியோர் விரைந்து வந்து சிறுமிகளை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் என்பது தெரிந்தது.

    அவர்கள் விடுதி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சென்னையை சுற்றி பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் நண்பர்களான 3 பேரும் பஸ் மூலம் புறப்பட்டு கோயம்பேடு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து சிறுமிகள் 3 பேரையும் ஷெனாய் நகரில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர். இது பள்ளி மங்களூருவில் உள்ள பள்ளி விடுதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×