search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவிகள் மத்தியில் கலெக்டர் சாந்தி பேச்சு"

    • கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து இன்று மாவட்ட கலெக்டர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன்.
    • பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ், இயங்கி வந்த அரசு மாதிரிப்பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தருமபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் ஆண்கள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று கலெக்டர் சாந்தி தொடங்கி வைத்தார். பின்னர் அரசு மாதிரிப்பள்ளி மாணவ, மாணவியர்களிடம் பேசியதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் ஏற்கனவே தருமபுரி அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் உண்டு உறைவிட வசதியுடன் கூடிய அரசு மாதிரிப் பள்ளி கடந்த 2021-ஆம் தொடங்கப்பட்டு, செயல்பட்டு வந்தது. இந்த அரசு மாதிரிப்பள்ளியில் 2022-2023 ஆம் கல்வியாண்டில் 12 -ஆம் வகுப்பில் 120 மாணவர்கள், மாணவியர்களும், 10 - ஆம் வகுப்பில் 80 மாணவர்கள், மாணவியர்களும் என மொத்தம் 200 மாணவர்கள், மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

    எனது ஊர் ஒரு சிறு கிராமம் தான். அங்கு இதுபோன்று அப்பொழுது எல்லாம் கல்வி கற்பதற்கு வசதிகள் கிடையாது. அப்படிப்பட்ட கிராமத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து இன்று மாவட்ட கலெக்டர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

    கிராமத்தில் பிறந்தாலும், சிறந்த கல்வியை ஆர்வமுடன் தொடர்ந்து கற்றதனால்தான் இன்றைய தினம் இந்த உயர்ந்த பதவியை என்னால் எட்ட முடிந்தது.

    எனவே, சிறப்பான கல்வியை அளித்து வருகின்ற இச்சிறப்பு மாதிரிப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்கள் கல்வி ஒன்றே அழியாத செல்வம் என்பதை கருத்தில் கொண்டு, சிறந்த கல்வியை கற்பது ஒன்றே முக்கிய குறிக்கோளாக கொண்டு, பாடங்களை தொடர்ந்து கவனமாக படித்தால் உங்களின் எதிர்காலத்தை ஒளிமயமானதாக எளிதில் உருவாக்கி கொள்ளலாம்.

    இங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் ஆசிரியர்கள் பயிற்றுவிக்கின்ற கல்வியை கவனமுடன் கற்று, அளிக்கின்ற பயிற்சியினையும் சிறப்பாக பயன்படுத்திகொண்டு உயர்ந்த கல்வியை கற்பதற்கு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

    எனவே இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் எதிர்காலத்தில் சிறந்த இடத்தை அடைவதற்கு சிறப்பான கல்வியை கற்க வேண்டும். மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பான கல்வி மூலம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கின்றோம். இதற்கு பெற்றோர்களும் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் சாந்தி பேசினார்.

    இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் சாந்தி, தருமபுரி, பென்னாகரம் சாலையில் உள்ள தனியார் ஆண்கள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் அரசு மாதிரிப்பள்ளியில் மாணவ, மாணவியர்கள் பயிலக்கூடிய வகுப்பறை கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவற்றில் அனைத்து வசதிகளும் முழுமையாக உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ×