search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் மாயம்"

    • 5 மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
    • மாயமான இருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியின் கடற்கரை பகுதியான காரைக்கால் கடலில் குளித்துக்கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் அலையில் சிக்கி மாயமாகினர்.

    மாணவர்கள் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார். 2 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான இருவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு சுற்றுலா வந்த நிலையில் இந்த சோக நிகழ்வு நிகழ்ந்துள்ளது.

    • தூங்கிக் கொண்டு இருந்தவர்கள் திடீரென காணவில்லை
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் திருமால் நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் திருப் பத்தூரில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று முன்தி னம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுவன் திடீரென காணவில்லை. சிறு வனை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுவனின் பெற்றோர் திருப்பத்தூர் டவுன்போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதேபோல் அதே பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வரும் திருப்பத்தூர் அருகே சின்னபசலைகுட்டை கிரா மத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தவன் காலையில் வீட்டில் இருந்து மாயமாகி உள்ளான்.

    இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

    • விஷால் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார்.
    • மகன் சையத்காசிமை விஷால் வந்து சந்தித்தார்.

    கூடுவாஞ்சேரி மின்வாரியம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் பிரபாகர் (45). இவர் சென்னை திருவொற்றியூரில் மாநகர பேருந்து டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, மகன்கள் தர்ஷன்(17), விஷால்(15) அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில், 2வது மகனான விஷால் நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை வீடு திரும்பிய அவர் அதே பகுதியில் உள்ள தெருவில் சைக்கிள் ஓட்டி கொண்டு இருந்தார். பின்னர் ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள அவரது நண்பரை பார்ப்பதற்காக அங்கிருந்து சைக்கிளில் சென்றார்.

    ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரை மீனாட்சிபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த சையதுஅமீன்(45) குரோம்பேட்டையில் மாநகர பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சையத்காசிமை விஷால் வந்து சந்தித்தார். பின்னர் இருவரும் திடீரென்று மாயமானார்கள். கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து திடீரென மாயமான மாணவர்களை தேடி வருகின்றனர்.

    • பெற்றோர் அடிக்கடி திட்டியதால் மாணவர்கள் வீட்டைவிட்டு ஓட்டம்
    • சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தபோது போலீசார் மீட்டனர்

    ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன், சசிகுமார் ஆகிய இருவர் தங்களுடைய 14 வயது மகன்களை நள்ளிரவு முதல் காணவில்லை என ஈரோடு ரெயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், ரெயில் மூலம் வெளியூர் சென்றிருக்கலாம் எனவும் தங்களது சந்தேகத்தை தெரிவித்தனர்.

    இதனையடுத்து அவர்களிடமிருந்து சிறுவர்களின் விவரங்களை பெற்று அனைத்து ரெயில்வே காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் எண்னை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என சைபர் செல் மூலம் கண்காணித்தபோது அவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரெயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக சிறுவர்களை மீட்க வேண்டி சென்னை மாநகர காவல்துறையினருடன் இணைத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் தேடி மேற்படி சிறுவர்கள் இருவரையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

    சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ள தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன் சிறுவர்களுக்கு முறையான அறிவுரைகள் வழங்கி பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்து சுற்றித்திரிந்த சிறுவர்களை கண்டுபிடித்து மீட்ட காவல் துறையினர்களை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

    10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களிடம் விசாரிக்கும்போது ''தாங்கள் இருவரும் நண்பர்கள். சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர்கள் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்தோம். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தோம் என்றனர்.

    ரெயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு ரெயில்வே காவல் உதவி மைய 24*7 எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500-ஐ தொடர்பு கொள்ளவும்.

    • சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது.
    • 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள். மாலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை வையாபுரி தெருவில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பெரிய கிணறு தெரு பகுதியை சேர்ந்த வெற்றிவேல் இவரது மகன் கோகுல் (வயது 12), 7-ம் வகுப்பும், அதே பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் இவரது மகன் கார்த்திகேயன் (13) 8-ம் வகுப்பும், ராஜேந்திரன் மகன் தரண் (14) 9-ம் வகுப்பும் படித்து வருகின்றார்கள். இவர்கள் 3 பேரும் பள்ளிக்கு சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர்கள். மாலையில் வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டனர். அப்போது அவர்கள் 3 பேரும் இன்று பள்ளிக்கு வரவில்லை என கூறியுள்ளனர்.

    இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் மாணவர்கள் காணவில்லை. இது குறித்து அம்மாபேட்டை போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

    • பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை.
    • சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூ ர்பேட்டை அருகே உள்ள களமருதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹாஜிம்பாஷா மகன் யாகூப் (வயது 13) அரசு பளளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். முகமது அலி மகன் அமீர் அலி (13), ரபீக் மகன் கையீப் (13). இவர்கள் 2 பேரும் தியாகதுருகம் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகின்றனர். 

    நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு சென்ற 3 பேரும் வீடு திரும்பவில்லை. பள்ளி முடித்து மசூதிக்கு சென்ற தொழுதுவிட்டு வீட்டிற்கு வருவார்கள் என்று காத்திருந்த பெற்றோருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. மாணவர்கள் படிக்கும் பள்ளி, அருகி லுள்ள மசூதிகள் என எங்கு தேடியும் 3 மாணவர்க ளையும் காண வில்லை. இதுகுறித்து 3 மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், களமருதூர் கிராமத்திற்கு வந்த திருநாவலூர் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரனை நடத்தினர். அதன்படி அப்பகுதி பஸ் நிறுத்துமிடத்திலிருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 3 மாணவர்களும் உளுந்தூர்பேட்டை செல்லும் பஸ்சில் ஏறி சென்றது தெரியவந்தது. இந்த மாணவர்களுடன் பயிலும் மாணவர்களிடம் விசாரித்த போது, 3 பேரும் சென்னையில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி கொண்டிருந்தது போலீ சாருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து 3 மாண வர்களின் பெற்றோரை தொடர்பு கொண்ட போலீசார் சென்னையில் உள்ள அவர்களின் உறவி னர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விஷயத்தை கூறினர். மாணவர்கள் அங்கு வந்தால் உடனடியாக தகவல் கொடுக்க அறிவுறுத்தினர். மேலும், இத்தகவல் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களிலும் பரவியது. இந்நிலையில் இந்த 3 மாணவர்களும் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ளதாக ஒரு மாணவனின் உறவினர் திருநாவலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக சென்னை ராயபுரம் சென்ற திருநாவலூர் போலீசார் 3 மாணவர்களையும் மீட்டனர். சென்னையில் மீட்க ப்பட்ட மாணவ ர்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மோகன்ராஜ், துணை சுப்பிரண்டு மகேஷ், திருநாவலூர் இன்ஸ்பெ க்டர் அசோகன் மற்றும் போலீசார் அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். காணாமல் போன மாணவர்கள் 3 பேரை திருநாவலூர் போலீசார் 24 மணி நேரத்தில் மீட்டது போலீசாருக்கு பொதுமக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • பள்ளிக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை
    • போலீசில் புகார்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய 2 மாணவர்கள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு இருவரும் சேர்ந்து சென்றனர். பள்ளி முடிந்து 2 மாணவர்களும் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் அக்கம் பக்கத்தில் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி உள்ளனர். மாணவர்கள் கிடைக்காததால் ஆற்காடு நகர போலீசில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர்களை தேடி வருகின்றனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே இது போல் மாயமாகி வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது.

    ×