search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் மறியல்"

    • பள்ளி கட்டிடம் இல்லாததால் ஆத்திரம்
    • மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என புகார்

    அரக்கோணம்:

    நெமிலி அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்ப பள்ளி உள்ளது. இங்கு 40- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளி கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2021-ம் ஆண்டு கட்டிடத்தை முழுவதும் இடித்து அப்புறப்படுத்தினர். இதனால் அங்கிருந்த மாணவர்களை அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 6 மாதங்களுக்கு முன் ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் பள்ளி கட்டிடம் கட்டுமான பணியை இதுவரைக்கும் தொடங்கவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.

    பள்ளியை உடனடியாக கட்டித்தர வேண்டும் என பெற்றோர்கள் கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை பள்ளியை கட்டுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் இரண்டாவது முறையாக பள்ளியை புறக்கணித்து வருகின்றனர். இதனால் பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது.

    உடனடியாக அதிகாரிகள் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அதுவரை தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் புறக்கணித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் நெமிலி பஸ் நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

    • திருமங்கலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி கிராம மக்கள்-மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிந்துப்பட்டி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட தும்மக்குண்டு கரிசல்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

    அரசு பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு அந்தப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளி அருகில் டாஸ்மாக் கடையை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதனை கண்டுகொள்ளா மல் கடந்த மாதம் 26-ந் தேதி தும்மக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட கடையை அக்றறக்கோரி சிந்துப்பட்டி பொதுமக்கள் சார்பில் போலீஸ் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது.

    மேலும் மாணவ-மாணவிகள் படிக்கும் பள்ளி அருகே டாஸ்மாக் கடை திறந்திருப்பதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும். அதனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு பள்ளி நிர்வாகம் சார்பிலும் அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனை கண்டித்தும், டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும் இன்று காலை திருமங்கலம்-உசிலம்பட்டி சாலையில் அமர்ந்து கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் அந்தப்ப குதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த திருமங்கலம் போலீஸ் டி.எஸ்.பி. வசந்தகுமார் மற்றும் போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை அகற்றப்படும் என உறுதி கூறியதை தொடர்ந்து ஒரு மணிநேரத்துக்கு பின் மறியல் கைவிடப்பட்டது.

    • போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து நடந்தது
    • போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள காயம்பட்டு கிராமத்தில் ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 8-ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியில் மாணவர்களுக்கு போதிய அடிப்படை வசதி இல்லை என கூறப்படுகிறது. குடிநீர், கழிவறைகள், வகுப்பறை கட்டிடங்கள் உட்பட பள்ளிக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் சரிவர வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் போதிய ஆசிரியர்கள் இல்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் அடிப்படை வசதிகள் உட்பட போதிய ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து பள்ளி மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியின் கேட்டை மூடி பூட்டு போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    • பள்ளிக்கல்வித்துறை 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 765-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமையாசிரியராக மீனாட்சி உள்ளிட்ட 20 ஆசிரியர்கள் உள்ளனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவனை 4ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி தலைமையாசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவனை தாக்கியதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் ஆகியோர் சேவூர் அரசு பள்ளியில் நேரில் சென்றுவிசாரணை நடத்தினர்.

    இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன், ஆங்கில ஆசிரியர் திலிப்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அதிரடி உத்தரவிட்டார்.

    பள்ளிக்கல்வித்துறை 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

    மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் டி.எஸ்.பி ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சஸ்பெண்டு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 4 பேரையும் மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு சென்று விடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தல்
    • 2 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலா ஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கு சிரமமாக உள்ளதால், தங்களது கிராமத்திற்கு கூடுதல் பஸ் இயக்க வேண்டுமென கூறி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வாலாஜாப்பேட்டை அடுத்த பாகவெளி கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்த ஊரிலிருந்து ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்காக ஆற்காடு மற்றும் விஷாரம் போன்ற நகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.ஆனால் தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ் வாலாஜாப்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஒரே ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுவதால் முசிறி, சென்னசமுத்திரம், தென்கடப்பந்தாங்கல், வள்ளுவம்பாக்கம் பெல்லியப்பா நகர் ஆகிய பகுதிகளிலிருந்து ஏராளமான மாணவர்கள் வருவதால் கூட்ட நெரிசலில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே தங்களது கிராமத்திலிருந்து இயக்கப்படும் பஸ்சினை விஷாரம் வரை இயக்க வேண்டும் மற்றும் கூட்ட நெரிசலை குறைக்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவேரிப்பாக்கம் போலீசார் மற்றும் வாலாஜா பேட்டை தாசில்தார் ஆனந்தன் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    • வேப்பூர் அருகே அரசுபள்ளியில் குடிநீர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    • சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர்

    கடலூர்

    கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவதுகுடி பகுதியில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பள்ளிக்கு குடிநீர் வராத காரணத்தால் பள்ளி மாணவர்கள் மாணவிகள் இன்று காலை சுமார் 9 மணி முதல் 9. 30 வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர் இதனால் சுமார் அரைமணி நேரம் சென்னை திருச்சி மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சா லையில் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×