search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சாதனை"

    • மண்டல அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அமிர்த வித்யாலயா பள்ளியில் சி.பி.எஸ்.இ. கல்வி துறை, மதுரை சர்வோதய பப்ளிக் குழுமம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மண்டல அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றை கம்பு, இரட்டை கம்பு, கம்பு சண்டை ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் இரட்டை கம்பு 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவி பர்ஹத் ஜபீன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். கம்பு சண்டை 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவன் ஷனேல் ஆண்டர்சன் முதல் பரிசு தங்கப்பதக்கம் வென்றார். ஒற்றை கம்பு பிரிவில் 12 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் மாணவர்கள் திவ்யதீக்க்ஷிதா, ஸ்டாண்லி ஆண்டர்சன் இரண்டாம் பரிசு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களை சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் மற்றும் பயிற்சியாளர்கள் திருமுருகன், செல்லபாண்டி பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.
    • திருப்பதிசாமி தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    ஓசூர்,

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஓசூரை சேர்ந்த 45 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு, கட்டா பிரிவில் 23 தங்கம், 11 வெள்ளி மற்றும் 5 வெண்கல பதக்கங்களையும், குமித்தோ பிரிவில் 1 வெள்ளி, 2 வெண்கல பதக்கங்கள் வென்றும், மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையையும் வென்று சாதனை புரிந்தனர்.

    இதனை தொடர்ந்து, சாதனை படைத்த மாணவர்களுக்கு ஓசூர் டென்னிஸ் கிளப்பில் நடந்த நிகழ்ச்சியில் செயலாளர் திருப்பதிசாமி தலைமையில் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், பொருளாளர் பசவலிங்கராஜ், கராத்தே மாஸ்டர் ரவி, பாப்பண்ணா மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் ராமநாதபுரம் மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் உலக சிலம்பம் விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. ராமநாதபுரம் நிக்கோலஸ் சிலம்பம் பயிற்சி பள்ளி மாணவர்கள் முதல் 3 இடங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.

    இப்போட்டியில் சிவகங்கை, மதுரை, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 பேர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரத்தில் இருந்து 24 மாணவர்கள் கலந்து கொண்டு 11 தங்கப்பதக்கம், 10 வெள்ளிப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் வென்று ராமநாதபுரம் மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்தனர். சிலம்பம் மாஸ்டர் மேத்யு இம்மானுவேல் உடன் இருந்தார். வெற்றி பெற்ற மாணவர்களை பெற்றோர்கள் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாவட்ட டேபிள் டென்னிஸ் போட்டியில் எஸ்.பி.கே. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.
    • 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    அருப்புக்கோட்டை

    சிவகாசி ரோட்டரி கிளப் சார்பில் விருதுநகர் மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டிகள் பல்வேறு பிரிவுகளில் நடை பெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. மேல்நிலைப் பள்ளி 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ், ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெற்றும் இரட்டையர் போட்டியில் 12-ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், பிரகதீஸ்வரன், ஆகிய இருவரும் முதலிடம் பெற்று கேடயங்கள் சான்றிதழ்கள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    ஒவ்வொரு பிரிவிலும் 58 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும் யூ 17 பிரிவில் 11-ம் வகுப்பு மாணவர் விமல் இரட்டையர் போட்டியில் 3-ம் இடம் பெற்றும், யூ-13 பிரிவில் 6-ம் வகுப்பு மாணவர் தேஜஸ் ஒற்றையர் போட்டியில் 2-ம் இடம் பெற்று சான்றிதழ்கள் பெற்றனர்.

    மேலும் இந்த பள்ளி மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றனர். சாம்பியன் பட்டம் வென்ற எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி டேபிள் டென்னிஸ் வீரர்களையும் ஊக்குவித்த உடற் கல்வி இயக்குனர் சவுந்தர பாண்டியன் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்களையும் நாடார்கள் உறவின்முறை தலைவர் காமராஜன், எஸ்.பி.கே. கல்வி குழும தலைவர் ஜெயக்குமார், பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன், பள்ளி தலைவர் சிவராம கிருஷ்ணன், உதவி தலைவர் கனகவேல், உதவி செயலா ளர் தங்கராஜ், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
    • பள்ளியின் முதல்வர் விவேக் மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வத்தையும் பாராட்டினார்.

    கிருஷ்ணகிரி,

    சேலம் மாவட்டம் எடப்பாடி உள்ள ஆச்சார்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கையுந்து போட்டி நடைபெற்றது.

    இதில் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் கிருஷ்ணகிரி வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    பள்ளியின் முதல்வர் விவேக் மாணவர்களையும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர் தமிழ்ச்செல்வத்தையும் பாராட்டினார்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    தருமபுரி, 

    விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் நரேன் 652-720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மற்றும் தி விஜய் மில்லினியம் சிபிஎஸ்இ பள்ளிகளில் விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் பயின்ற மாணவர்கள் 2023 ல் நடைபெற்ற நீட் தேர்வில் 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு இடஒதுக்கீட்டில் மருத்துவ சேர்க்கை பெற தகுதி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் நரேன் 652-720 மதிப்பெண்கள் பெற்று முதலிடமும், ஐவன்மாக்ஸிமஸ்நாதன் 650-720 பெற்று இரண்டாம் இடமும், சுகேஷ்வரன் 643-720 மூன்றாமிடமும், தமிழ் வழியில் நீட் பயிற்சி பெற்ற மாணவி சித்ரா 506-720 பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்.

    சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. பாராட்டு விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழுமத்தின தலைவர் இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குநர் பிரேம், சிநேகா பிரவின், பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரபானு, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் பயின்ற முதல் மூன்று இடங்கள் மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு கல்விக் குழுமத்தின் தலைவர் இளங்கோவன் தலா ரூ.1,00,000 மதிப்பிலான காசோலை களை வழங்கி மாணவர்களை ஊக்கப்ப டுத்தினார்.

    விழாவில் விஜய்ஸ் ஏஸ் அகாடமியின் மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி, இயக்குநர் கல்யாண் பாபு மற்றும் பள்ளி முதல்வர்கள் பத்மா, ஜமுனா, நவீதா சங்கர், சன்ராபின் மூத்த முதல்வர் துரைராஜ் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • மாணவி ஷாலினி 485 மதிப்பெண்களும், மாணவி மோனிகா 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.
    • எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 11-ம் வகுப்பு வரை அட்மிஷன் நடந்து வருகிறது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே எருமியாம்பட்டியில் இ.ஆர்.கே. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில்

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவி நிஷா 500-க்கு 489 மதிப்பெணகள் பெற்று சாதனை படைத்தார். மாணவி ஷாலினி 485 மதிப்பெண்களும், மாணவி மோனிகா 479 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர்.

    இந்த பள்ளியில் 6 பேர் 475 மதிப்பெண்களுக்கு மேலும், 44 பேர் 400 மதிப்பெண்களுக்கும் மேலும் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 3 பேர் 100-க்கு 100 பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் தீத்துமாலை, பொறுப்பாளர் பார்த்திபன், மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் கூறுகையில் எங்கள் பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 11-ம் வகுப்பு வரை அட்மிஷன் நடந்து வருகிறது என்றார்.

    • பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் 100 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • 2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 2022 - 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவ, மாணவியர்களும் 100 தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    தான்ய ஸ்ரீ 496, கோபிகா - 495, எழில் அரசி - 494, மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    8 மாணவர்கள் 490-க்கு மேலும், 25 மாணவர்கள் 480-க்கு மேலும், 82 மாணவர்கள் 450-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். பாடவாரியாக முழு மதிப்பெண்கள் (100,100) ஆங்கிலம்-1 மாணவி, கணிதம்-12 மாணவர்களும், அறிவியல்-6 மாணவர்களும், சமூக அறிவியல்-6 மாணவர்களும் பெற்றுள்ளனர்.

    இதே போல் பிளஸ்-1 தேர்வில் அனிருத்-589, மதிப்பெண்களும், விபுஷா -587, மதிப்பெண்களும் பரத்குமார் -584. மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    580 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 110 மாணவர்களும், மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 100, 100 பெற்றவர்கள் இயற்பியல்-2, விலங்கியியல்-1, கணிணி அறிவியல்-1, கணினிப்பயன்பாடுகள்-1,

    இதேபோல் பிளஸ்-2 பொதுத்தேர்வில் போற்றிநாதன் - 593, மதிப்பெண்களும் தேவிகா- 592 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    590 மதிப்பெண்களுக்கு மேல் 4 மாணவர்களும், 580 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும், 570 மதிப்பெண்களுக்கு மேல் 18 மாணவர்களும், 560 மதிப்பெண்களுக்கு மேல் 25 மாணவர்களும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 31 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 97 மாணவர்களும், மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    முதன்மை பாடங்களான நான்கு பாடங்களிலும் (400,400) மதிப்பெண் பெற்றவர்கள் 1. கனிஷ்வரன் 2. தேவிகா பாடவாரியாக முழு மதிப்பெண்கள் (100,100) பெற்றவர்கள் கணிதம்-5, இயற்பியல்-1, வேதியியல்-7, உயிரியல்-6, கணிணி அறிவியல்-5, கணக்குப்பதிவியல்-1, வணிகவியல்-1, பொருளியல்-1, வணிகக்கணிதம்-1.

    2022-2023-ஆம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

    தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களை செந்தில் குழுமத் தலைவர் செந்தில் கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செந்தில் கல்வி குழுமங்களின் செயலாளர் தனசேகர், நிர்வாக அலுவலர் சக்திவேல், முதல்வர் வள்ளியம்மாள், முதல்வர்(நிர்வாகம்) ரபிக் அஹமத், மற்றும் துணைமுதல்வர் கவிதா மற்றும் ஆசிரியர்கள் மனதார வாழ்த்தினார்கள்.

    • 10, 12- ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
    • ஜெயஸ்ரீ, சஞ்சனா 478 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்

    தருமபுரி,

    தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி மாணவர்கள் 10, 12- ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

    2022-23-ம் ஆண்டு 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.சி பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோட்டில் உள்ள தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி மாணவிகள் பிரத்திக்யா 493 மதிப்பெண் பெற்று மாவட்ட, பள்ளி அளவில் முதலிடமும், காயத்ரி 479 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், ஜெயஸ்ரீ, சஞ்சனா 478 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    தருமபுரி பென்னாகரம் மெயின் ரோட்டில் சோகத்தூரில் உள்ள தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி மாணவி தன்ஷிகாஸ்ரீ 483 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவி ககிடபள்ளி ஹாஷினி 481 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவன் திவாகர் அன்பு 474 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    2022-23 -ம் ஆண்டு 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் தருமபுரி பென்னாகரம் மெயின் ரோட்டில் சோகத்தூரில் உள்ள தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி மாணவன் சுகேஷ்வரன் 482 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும் பள்ளி அளவில் முதலிடமும், மாணவன் ரோகித் கண்ணா475 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவி ஹர்ஷவர்தினி 473 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    கிருஷ்ணகிரி இராயக்கோட்டை ரோட்டில் உள்ள தி விஜய் மில்லினியம் சீனியர் செகன்டரி பள்ளி மாணவன் இவன் மேக்ஸிமஸ் நாதன் 476 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடமும், மாணவன் யுவன் சங்கர் 475 மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், மாணவன் முகமத் ஷோயப் 454 மதிப்பெண் பெற்று 3-ம் இடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

    பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மாவட்ட மற்றும் பள்ளி யளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளையும் சாதனை புரிய உறுதுணை யாக இருந்த பள்ளியின் துணை முதல்வர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியை -ஆசிரியர்க ளுக்கும் மற்றும் பெற்றோர்க ளுக்கும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்விக் குழுமத்தின் தலைவர் இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குநர் பிரேம், சிநேகா பிரவின், பள்ளியின் முதன்மை நிர்வாக அலுவலர் சந்திரபானு, பள்ளியின் மூத்த முதல்வர் துரைராஜ், முதல்வர்கள் சன் ராபின், ஜமுனா ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

    • 10 பேர் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
    • 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சஷ்மிதா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூரை அடுத்த அணைபுதூரில் உள்ள ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி மாணவர்கள் சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். பிளஸ்-2 தேர்வில் பள்ளி மாணவி ஹரினிகா 500-க்கு 488 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவன் ஹர்ஷத் 481 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், மாணவி ஸ்ரீ சாந்தி 468 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் வேதியியல் பாடத்தில் ஒரு மாணவரும், கணினி அறிவியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 3 மாணவர்கள் 95 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 3 பேர் 90 சதவீதத்திற்கு மேலும், 7 பேர் 85 சதவீதத்திற்கு மேலும், 7 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 18 பேர் 70 சதவீதத்திற்கு மேலும், 10 பேர் 60 சதவீதத்திற்கு அதிகமாகவும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    இதேபோல் 10-ம் வகுப்பு தேர்வில் மாணவி சஷ்மிதா 500-க்கு 489 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மாணவி ஸ்ரீமதி 485 மதிப்பெண்களுடன் 2-ம் இடமும், மாணவி பிரியங்கா 480 மதிப்பெண்களுடன் 3-ம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் தேர்வு எழுதிய மாணவர்களில் 3 பேர் கணித பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும், 2 பேர் தமிழ் பாடத்திலும், ஒருவர் சமூக அறிவியல் பாடத்திலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 19 மாணவர்கள் 90 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், 28 பேர் 80 சதவீதத்திற்கு மேலும், 27 பேர் 70 சதவீதத்திற்கு மேலும், 16 பேர் 60 சதவீத மதிப்பெண்களுக்கு அதிகமாகவும் பெற்றுள்ளனர். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர்லட்சுமி நாராயணன் தலைமை தாங்கினார். இதில் பிளஸ்-2 மற்–றும் 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் பள்ளி முதல்வர் கணேஷ், நிர்வாக அலுவலர் சுப்பிரமணியம் உள்பட மாணவர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.

    • பிளஸ்-2 பொதுத்தேர்வில் பர்துல் அர்சித்தா என்ற மாணவி 600-க்கு 593 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
    • தொடர்ந்து இப்பள்ளி 17 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் கலைமகள் கலாலயா மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் 2023-2024 கல்வி ஆண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் பர்துல் அர்சித்தா என்ற மாணவி 600-க்கு 593 மதிப்பெண் பெற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3-ம் இடமும், போச்சம்பள்ளி தாலுக்கா அளவில் முதல் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

    மேலும் இயற்பியலில் 100-100-க்கு 3 மாண வர்களும், வேதியலில் 100-100 3 மாணவர்களும், கணிதத்தில் 100-100 3 மாணவர்களும் தமிழ், ஆங்கிலம், உயிரியல் ஆகிய பாடங்களிலும் 100-90 மதிப்பெண்களை பெற்று மாணவர்கள் 100 சதவீதம் பெற்று சாதனை படைத்துள்ளனர். முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி இயக்குனர் அமுதினி, தாளாளர் ராசேந்திரன், முதல்வர் சூரியமூர்த்தி மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள், பணியாளர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அவற்றிற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை பள்ளி இயக்குனர், தாளாளர் பாராட்டினர்.

    தொடர்ந்து இப்பள்ளி 17 ஆண்டுகளாக பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இப்பள்ள்யில் நீட், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் பயிற்று விக்கப்படுகின்றன. 2023-2024 ஆண்டிற்கான எல்.கே.ஜி. முதல் 11- வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    • சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.
    • இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் கல்வராயன் மலை கல்வராயன் மலை மண்ணுார் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கல்வி, கலைத்திறன் மற்றும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ–மாணவியருக்கு பாராட்டு விழா மற்றும் 8-ம் வகுப்பு முடித்த மாணவ–மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி, பள்ளி வளா கத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவிற்கு, பள்ளி தலைமை யாசிரியர் கதிர்வேல் தலைமை வகித்தார். ஆசிரியர் சக்திவேல் வரவேற்றார். தேசிய திறனறித்தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகள் சி.அனிசியா, ஜோ. ஹாசினி ஆகியோருக்கு, பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பில் பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து, கனவு மாணவர் விருது பெற்ற மாணவர்கள் மற்றும் கல்வி அடைவுத்தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் மற்றும் அழகிய கையெழுத்து பயிற்சி பெற்றவர்களுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பள்ளியில்இந்த ஆண்டு 8-ம் வகுப்பு முடித்து வேறு பள்ளிகளில் 9-ம் வகுப்பு சேரவுள்ள மாணவ–மாணவிகளுக்கு கல்வி வழி காட்டு நிகழ்ச்சி நடை பெற்றது. இவ்விழாவில், பள்ளி மாணவ–மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.

    ×