search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்களுக்கு பாராட்டு"

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5560 மதிப்பிலான காதொலி கருவிகள் 6 பேருக்கும், ரூ.9050 மதிப்பிலான 3 சக்கர சைக்கிள் 3 பேருக்கும் என 14 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.71630 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    மேலும் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.

    கூட்டத்தில் வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, சிறுபான்மையினர் நல அலுவலர் இந்துமதி, ஆதி திராவிடர் நல அலுவலர் சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன.
    • இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    கம்பம்:

    தென் மாவட்ட அளவிலான யோகாசன போட்டிகள் கம்பத்தில் நடைபெற்றன. இதில் வெற்றி மாணவர்கள் வருகின்ற பிப்ரவரி மாதம் இலங்கையில் நடைபெறுகின்ற சர்வதேச யோகா போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றார்கள்.

    இந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் காந்தவாசன் மற்றும் செயலர் சுகன்யா காந்தவாசன், பள்ளியின் முதல்வர் புவனேஸ்வரி மற்றும் உதவி முதல்வர் லோகநாதன் மற்றும் யோகா ஆசிரியர்கள் துரை ராஜேந்திரன் மற்றும் ரவி ராம் ஆகியோர்களும் பாராட்டி சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கினர். 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவில் ரித்திக்ஷா, தன்யா, ஹாஷினி ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    அமர்ந்த நிலை பிரிவில் ரூபியா, அகல்யா, தேவஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்றனர். 8 முதல் 11 வயது பிரிவில் சர்வின், சந்தோஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். பேலன்ஸ் பிரிவில் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பிரிவில் தருண், வர்ஷன், விபின் மற்றும் ஹரிஹர சுதன் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

    • தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி கீர்த்தி, வெள்ளி பதக்கம் வென்ற மாணவர் டீலக்ஸ் சச்சின் மற்றும் குழு போட்டியான கபடியில் பங்கு பெற்றனர்.
    • இந்த மாணவர்களை தம்பிதுரை எம்பி பாராட்டினார்.

    ஓசூர்,

    21- வது அகில இந்திய வேளாண்மைப் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகளம் மற்றும் குழு போட்டிகள், அரியானா மாநிலம் நூசாக்கிலுள்ள சவுத்ரி சரண்சிங் அரியானா வேளாண்மை பல்கலைகழகத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அத்திமுகத்தில் உள்ள அதியமான் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் பங்கு பெற்றனர்.

    இதில், தடகள போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்ற மாணவி கீர்த்தி, வெள்ளி பதக்கம் வென்ற மாணவர் டீலக்ஸ் சச்சின் மற்றும் குழு போட்டியான கபடியில் பங்கு பெற்ற மாணவர் நிர்மல் தீபக் ஆகியோரையும், கல்லூரியின் உடற்கல்வி உதவி பேராசிரியர் வினிக்கர்ராஜ் ஆகியோரை, அதியமான் வேளாண்மைக் கல்லூரி நிறுவனர் டாக்டர் மு. தம்பிதுரை எம்.பி மற்றும் கல்லூரியின் அறங்காவலர் சுரேஷ் பாபு, கல்லூரியின் முதல்வர் ஸ்ரீதரன், மேலாளர் சுப்பிரமணி, மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர் குப்புசாமி, ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • பைசுஅள்ளி பெரியார் பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.
    • பாராட்டு தெரிவித்து சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பைசுஅள்ளி பெரியார் பல்கலைக்கழக கணிதவியல் துறை சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி கணிதவியல் துறையின் இளநிலை இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, முதுநிலை முதலாம் ஆண்டு, மாணவ மாணவிகள் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

    மேலும் ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். அதற்கு பாராட்டு தெரிவித்து சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை ஊக்கு விக்கும் வகையில் தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன் மற்றும் கணிதத் துறை தலைவர் அரங்கநாயகி மற்ற பேராசிரியர்கள் மற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டி கவுரவப்படுத்தினர்.

    • 213 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினர்
    • 22 கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டு

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் கலந்து கொண்டு 213 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் 22 கல்லூரி பேராசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் கல்லூரி முதல்வர் முகமது இலியாஸ், கல்லூரி செயலாளர் முனீர் அகமது , துணை முதல்வர் ராஜா முகமது காமில், துறை தலைவர் தன்வீர் அகமது மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • நீலகிரி மாவட்டம் ஊட்டி டாக்டர் கே.ஜே ஜி பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.
    • சப் ஜூனியர் பிரிவில் சந்தியா 65 கிலோ எடையில் தங்கம் வென்றார்.

    ஊட்டி,

    சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் நீலகிரி மாவட்டம் ஊட்டி டாக்டர் கே.ஜே ஜி பள்ளி மாணவ, மாணவிகள் 15 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் சப் ஜூனியர் பிரிவில் சந்தியா 65 கிலோ எடையில் தங்கம் வென்றார். பிரஜித் 32 கிலோ எடை பிரிவிலும், பிரனீத் 34 கிலோ எடை பிரிவிலும், யுதை 36 கிலோ எடை பிரிவிலும், மாணவிகள் பிருந்தா 44 கிலோ எடை பிரிவிலும், பிரதயா 40 கிலோ எடை பிரிவிலும், கீர்த்தி லட்சுமி 42 கிலோ எடை பிரிவிலும்,கனிஷ்கா 56 கிலோ எடை பிரிவிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.

    இதேபோல் ஹரிஹரன் 38 கிலோ எடை பிரிவிலும், பிரதிஷ்கா 44 கிலோ எடை பிரிவிலும், வீணா 32 கிலோ எடை பிரிவிலும் வெண்கல பதக்கங்களை வென்றனர். சப் ஜூனியர் எடை பிரிவிற்கான 3 வது இடத்தை பெற்று அதற்கான கோப்பையையும் பெற்றனர்.

    இவர்களைப் பாராட்டும் விதமாக பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு தாளாளர் சந்திரன், பள்ளி முதல்வர் எஸ்வந்த் ஆகியோர் முன்னிலை வகித்து மாணவர்களை பாராட்டி பேசினர். அர்ஜுன் டேக்வாண்டோ பயிற்சியாளர், ஜெகநாதன் உடல் கல்வி ஆசிரியர், ராஜேஸ்வரி விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கவுசல்யா, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து பாராட்டினர்.

    • அரசு பள்ளியில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் நீட்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த, எடப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சரண்ராஜ் ஹரி, பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.
    • மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காயத்ரி, குமரேசகனி, அருளாளன், மோகனவேல் ஆகியோரை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    எடப்பாடி:

    எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் நித்தியானந்தம், மாவட்ட செயலாளர் உமா காந்தன், மாவட்ட இணைச்செயலாளர்கள் இளையராஜ், சேகர், மணிமாறன், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பூங்கோதை, ராஜா, பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் குப்புராஜ் வரவேற்றார்.

    இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலாளர் கமலக்கண்ணன் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு, அரசு பள்ளியில் 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில் நீட்டில் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்த, எடப்பாடி அரசு பள்ளி மாணவர்கள் சரண்ராஜ் ஹரி, பிரகாஷ் ஆகியோரை பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

    மேலும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய காயத்ரி, குமரேசகனி, அருளாளன், மோகனவேல் ஆகியோரை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர், ஆசிரியை–கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்களை பணி அமர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு என்று தனியாக பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது.
    • இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.

    அரியலூர் ;

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள் 8 பேர், ஆசிரியர்கள் குறித்தும், அவர்களது தன்னலமற்ற சேவைகள் குறித்தும் சிறப்பாக பேசினர்.

    இதையடுத்து, அவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அப்பள்ளியின் தலைமை ஆசிரியர்(பொறுப்பு)சரவணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கும், அவர்களுக்கு பயிற்சி அளித்த ஆசிரியை கனகலட்சுமிக்கும் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் ரவி, ஆசிரியர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடந்த செஸ் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக தமிழகம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டார அளவில் நடந்த 14 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பிரிவில் திண்டுக்கல் சந்தை ரோடு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர் சந்தோஷ் முதல் இடத்தையும், ரகுவீர் 3ம் இடத்தையும் பிடித்தனர். அவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    வருகிற 25ம் தேதி மாவட்ட அளவில் நடைபெற உள்ள போட்டியில் இவர்கள் பங்கேற்க உள்ளனர். மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தினி, உடற்கல்வி ஆசிரியர் வின்னிகுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    ×