search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர் சாவு"

    • பிளஸ்-1 படித்து வந்தார்
    • கிணற்றில் தவறி விழுந்த மாணவர் பரிதாபமாக இறந்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே நொச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். இவருக்கு சசிகலா என்ற மனைவியும், விஷால் (வயது 16). ரித்திஷ் (12) ஆகிய 2 மகன்களும் இருந்தனர். பாஸ்கர் சவுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். பெரம்பலூரில் தனியார் பள்ளி ஒன்றில் விஷால் பிளஸ்-1-ம், ரித்திஷ் 6-ம் வகுப்பு படித்து வந்தனர்.

    நேற்று காலை சசிகலா அதே பகுதியில் உள்ள தனது வயலில் பயிரிட்டுள்ள மக்காச்சோளத்திற்கு மருந்து தெளிக்க மகன் விஷாலுடன் சென்றுள்ளார். அங்கு மருந்தில் கலக்குவதற்காக குடத்தில் தண்ணீர் எடுத்து வர விஷால் கிணற்றில் இறங்கியுள்ளார். அப்போது விஷால் கால் தடுமாறி கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் விஷால் கிணற்றில் தண்ணீரில் தத்தளித்தவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை கண்ட அவரது தாயார் கிணற்றில் தவறி விழுந்த மகனை காப்பாற்றுமாறு கதறி அழுதவாறு வயலில் வேலை செய்தவர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து வயலில் வேலை செய்தவர்கள் கிணற்றில் குதித்து விஷாலை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் விஷால் கிணற்று தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சசிகலா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாப்பாரப்பட்டியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • முன்னால் சென்ற டிராக்டர் திடீரென்று பிரேக் போட்டதால் நடந்த விபத்தில் கல்லூரி மாணவர் காயமடைந்து உயிரிழந்தார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பிக்கிலி பகுதியைச் சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் துரைமுருகன் (வயது18). இவர் தருமபுரி தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் துரைமுருகன் தனது உறவினர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பி.கொல்லப்பட்டிக்கு வந்தார். அங்கு அவரை வீட்டில் விட்டுவிட்டு பின்னர் அவர் மீண்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது அவர் ஜோனபாறை என்ற இடத்தில் வந்தபோது முன்னால் சென்ற டிராக்டரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதனால் துரைமுருகன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் அந்த டிராக்டர் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் பலத்த காய மமைடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக் கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனின்றி பரிதாப மாக உயிரிழந்தார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்:

    வேலூர், தொரப்பாடி யை சேர்ந்தவர் சரவணன். கார் டிரைவர். இவரது மகன் சுகந்தன் (வயது 21).

    இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். சுகந்தன் நேற்று இரவு 8 மணி அளவில் தனது நண்பர்களுடன் அரியூர் ரெயில்வே கேட் அருகே உள்ள தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று வேகமாக வந்தது. இதனை கவனிக்காமல் தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்த சுகந்தன் ரெயில் அருகே வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    சுகந்தன் உள்ளிட்ட நண்பர்கள் உயிர் பிழைக்க தப்பி ஓடினர். அதற்குள் வேகமாக வந்த ரெயில் சுகந்தன் மீது மோதி தூக்கி வீசப்பட்டார்.

    படுகாயம் அடைந்த சுகந்தனை அவரது நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கும்பா றை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுகந்தன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கல்லூரி தேர்வில் மூன்று பாடங்களில் அரியர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
    • மனவிரக்தியில் இருந்த ஜெய்கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அருகே உள்ள மூக்கனூர்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல். இவரது மகன் ஜெய்கணேஷ் (வயது16). இவர் கடத்தூரில் உள்ள அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் கல்லூரி தேர்வில் மூன்று பாடங்களில் அரியர் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரை வீட்டில் பெற்றோர்கள் கண்டித்து அறிவுரை கூறியுள்ளனர். இதனால் மனவிரக்தியில் இருந்த ஜெய்கணேஷ் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

    உடனே அக்கம் பக்கத்தினர் இவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெய்கணேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் இவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

    இது குறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார்.
    • மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வாணியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அரசு (வயது 17) ஐடிஐ மாணவர். இவர் கடந்த 22 ஆம் தேதி ஐடிஐ பாலிடெக்னிக் ஆசிரியர் தோட்டத்தில் தேங்காய் பறிக்க அழைத்து சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி அரசு இறந்தார். இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் அரசிற்கு நீதி வழங்க வேண்டும் என்று ஒன்று திரண்டு பாலிடெக்னிக் முன்பு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி பொது மக்களை கலைந்து போக செய்தனர். இந்நிலையில் போலீசார் பொதுமக்களுக்கு இடையூறாக போராட்டம் நடத்தியதாக சுமார் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை விசாரித்து வந்த நிலையில் போராட்டம் நடத்துவதற்காக பொதுமக்களை வாணியம் பாளையத்திலிருந்து 2 மினி லாரிகளில் பண்ருட்டிக்கு அழைத்து வந்த மினி லாரி உரிமையாளர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியது. 

    • இவர்கள் இன்றுகாலை கல்லூரி பஸ்சை பிடிக்க முடியாமல் தவற விட்டனர்.
    • தருமபுரி செல்லியம்மன் கோவில் அருகே வந்த போது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள மேக்னாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பெரியசாமி (வயது19). இவரது நண்பர் மூர்த்திகொட்டாய் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (19). இவர்கள் இருவரும் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் இவர்கள் இன்றுகாலை கல்லூரி பஸ்சை பிடிக்க முடியாமல் தவற விட்டனர். இதனால் இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது தருமபுரி செல்லியம்மன் கோவில் அருகே வந்த போது அரசு பஸ் எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்ப வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் ஏற்பட்ட மின் கசிவை சரிசெய்த போது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாற்று வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் செய்யாறு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் வயர் மேன் எலக்ட்ரீசியன் படித்து வந்தார்.

    நேற்று மாலை இவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக விக்னேஷ் சுவிட்ச் போர்டில் கை வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட உறவினர்கள் விக்னேசை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு எலி பேஸ்ட் தின்று விட்டனர்.
    • சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம்,ஜிட்டாண்ட அள்ளி அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மகள் சினேகா (வயது.19), இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள அரசுபாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    ஜிட்டாண்டஅள்ளி அருகே உள்ள குளிக்காடு பகுதியை சேர்ந்த முருகன் மகன் தமிழரசு ( வயது 18) தருமபுரியில் உள்ள ஐ.டி.ஐ. கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

    கடந்த வாரம் சினேகாவிற்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய முடிவானது,

    இந்நிலையில் கடந்த 7-ம் தேதியன்று பாலக்கோடு அருகே உள்ள முருகன் கோவிலில் இருவரும் சந்தித்து ரகசிய திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து நாங்கள் இருவரும் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம், ஆனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறோம் என செல்போனில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி விட்டு எலி பேஸ்ட் தின்று விட்டனர்.

    செல்போனில் வந்த தகவலை பார்த்து விட்டு 2 பேரின் உறவினர்களும் அலறி அடித்து கொண்டு கோவிலில் சென்று பார்த்த போது 2 பேரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இருவரையும் உடனடியாக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா உயிரிழந்தார். மேல்சிகிச்சைக்காக தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழரசு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பாலக்கோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • விஷப்பூச்சி கடித்து மாணவர் பரிதாபமாக இறந்தார்.
    • பள்ளியை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வேளச்சேரி பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி உள்ளது. இங்கு செம்பட்டி அருகே உள்ள பூ மங்களப்பட்டியைச் சேர்ந்த செந்தமிழன் சுமதி தம்பதியரின் மகன் நிதிஷ் (12) 8-ம் வகுப்பு படித்தான்.

    கடந்த 22-ந்தேதி பள்ளியில் இருந்த போது விஷபூச்சி அவனை கடித்தது. இதில் அவன் பரிதாபமாக இறந்தான்.

    தகவல் அறிந்த உறவினர்கள் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டும், மறியலிலும் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டம் காரண மாக பள்ளி மூடப்பட்டி ருந்தது. இந்த நிலையில் இன்று பள்ளி திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மீண்டும் பள்ளியை திறக்கக்கூடாது என்று கோரி பள்ளியின் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

    இன்ஸ்பெக்டர் பத்மநாபன், ஏட்டு தினேஷ் மற்றும் போலீசார் போராட்ட த்தில் ஈடுபட்டவர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி மீண்டும் மூடப்பட்டது. அதன் பிறகு பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.

    ×