search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைக்காலத்தில் காய்கறிகள் வரத்து குறைந்தால் விலை அதிகரித்துள்ளது"

    • காய்கறிகள் வரத்து குறைவு
    • விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது

    வேலூர்:

    வேலூரில் கடந்த வாரம் தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரை விற்பனை செய்யப்பட்டது. இப்போது உள்ளூர் பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்த தால், விலை சற்று அதிகரித்துள்ளது.

    தக்காளி விலை உயர்வு

    அதேநேரம், ஆந்திரா வில் இருந்துதான் தக்காளி வரத்து உள்ளது. இதன் காரணமாக, மொத்த வியா பாரிகளுக்கு 27 கிலோ எடை கொண்ட பெட்டி தக்காளி, ரூ. 700 முதல் 900 வரை விலை உள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கிலோ ரூ. 40-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. உள்ளூர் பகுதிகளில் விளையும் தக்காளி வரத்து அதிகரித்தால்தான், தக்காளி விலை குறையும்.

    இதேபோல், கத்தரிக் காய் கிலோ ரூ.40 ரூபாய், கேரட்-40, வெங்காயம்-30 ரூபாய் என்ற நிலையே தொடர்கிறது.

    மழைக்காலத்தில் காய்கறிகள் வரத்து குறைந்தால் அவற்றின் விலை மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×