search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மலர் மாலை"

    • திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
    • வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

    நாகப்பட்டினம்:

    மாமன்னர்கள் மருதுபாண்டியரின்1801-வது குருபூஜை விழாவில். திருப்பத்தூரில் மருதுபாண்டியர் தூக்கலிடப்பட்ட இடத்தில் வீர வணக்கம் செலுத்தப்பட்டது.

    இதில் முக்குலத்துபுலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு.சரவணத்தேவர் வீர வணக்கம் செலுத்தினார்.

    அதனையடுத்து சிவகங்கை கத்தபட்டு கிராமத்தில் வாளுக்குவேலி அம்பலத்தின் 221-வது பெருவிழாவில் மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தினார்.

    இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணவித்து மரியாைத செலுத்தப்பட்டது.
    • திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன் மற்றும் பலர் கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதற்கு கரந்தை பகுதி அ.தி.மு.க. செயலாளர் அறிவுடை நம்பி தலைமை தாங்கி அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், ஒன்றிய செயலாளர் துரை. வீரணன், பகுதி செயலாளர்கள் சாமிநாதன், சண்முக பிரபு, நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ், பகுதி துணை செயலாளர் சி.ஏ.தாஸ், கவுன்சிலர் சரவணன், விவசாயப் பிரிவு ஒன்றிய செயலாளர் கணேசன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
    • மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.

    தஞ்சாவூர்:

    பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் பாரத் கல்லூரியில் உள்ள பாரதியார் சிலைக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மகாகவி பாரதி தேசிய பேரவை தஞ்சை மாவட்டத்தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயல் தலைவர் மூவர் கோட்டை ஸ்ரீதர் மாலை அணிவித்தார்.

    நிகழ்ச்சியில் துணை த்தலைவர்கள் பூதலூர் மோகன்ராஜ், முனைவர் செந்தில்குமார், குருவி ரமேஷ்குமார், சாய்சரன், பாரத் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் மா.சதானந்தம். பேராசிரியை சிவரஞ்சனி, பாரத் அலைகள் இணை ஆசிரியர் வே. தேவநேசன், பாரதி இயக்கத்தை சேர்ந்த மோகன்,கண்ணையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×