search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை மீது வழக்கு"

    மேற்கு வங்காளத்தில் சிகிச்சை பெற வந்த பெண்ணுக்கு தவறான ரத்த வகையை செலுத்தி சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #ColumbiaAsiaHospital #InfusingWrongBlood #PoliceFilesCase
    கொல்கத்தா

    கொல்கத்தாவை சேர்ந்தவர் பைசாகி சஹா (31). இவர் வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டார். இதையடுத்து, அவரது கணவர் கொலம்பியா மருத்துவமனையில் கடந்த 5-ம் தேதி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு நடந்த ஆபரேஷனின்போது ரத்த வகையை மாற்றி செலுத்தி உள்ளதால், அவரது நுரையீரல், சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் அவர் தற்போது எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.



    இதுதொடர்பாக, அவரது கணவர் அபிஜித் சஹா கூறுகையில், கடந்த 5-ம் தேதி எனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்தேன். அவருக்கு ரத்த வகையை மாற்றி ஆபரேஷன் செய்துள்ளனர். அதனால் எனது மனைவி கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளார். இதுவரை நான் 2.5 லட்சம் பணம் கட்டியுள்ளேன். ஆனால், மருத்துவமனை நிர்வாகத்தினர் பில் கட்டினால் தான் சிகிச்சை அளிப்போம் என தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முதல் மந்திரி மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதில் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன் என்றார்.

    இதையடுத்து, அவர் கொடுத்த புகாரின் பேரில் பிதான் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இதற்கிடையே, மருத்துவமனை நிர்வாக அதிகாரி தீர்த்தங்கர் பாகி  கூறுகையில், பைசாகி சஹாவுக்கு உரிய சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். மருத்துவ குழுவினர் அவரை கண்காணித்து வருகின்றனர். அவரது கணவர் கூறியவாறு, அவரிடம் யாரும் பணம் கேட்டு நிர்ப்பந்தம் செய்வதில்லை. அப்படி யாராவது செய்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.  #ColumbiaAsiaHospital #InfusingWrongBlood #PoliceFilesCase
    ×