search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ ஊழியர்"

    • ஊக்கத்தொகையை தாமதமின்றி வழங்க கோரிக்கை
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் நாகர் கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    தன்னார்வலர்கள் என்பதை ஊழியர்கள் என பெயர் மாற்றி அங்கீகரிக்க வேண்டும், ஊக்கத் தொகையை மாதந்தோறும் தாமதமின்றி வழங்க வேண்டும், ஊதியமாக நிர்ணயம் செய்து காலத்திற்கு ஏற்ற ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஒரே சீரான பணி நேரத்தை நிர்ணயம் செய்து முழு நேர ஊழியராக்க வேண்டும், அரசு விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களை விடுப்பாக கருத வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் விக்னேஸ்வரி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்க மோகன், தமிழ்ச்செல்வி, இந்திரா, சந்திரபோஸ், சித்ரா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்

    • பண்ருட்டியில் பெண் மருத்துவ ஊழியர் மாயமானார்.
    • சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை மேட்டா மேடு பகுதியை சேர்ந்தவர் சகாதேவன். அவரது மகள் சந்தியா (வயது 24) இவர் எம்.எஸ்.சி. முடித்துவிட்டு புதுவை மதகடிப்பட்டு உள்ள மணக்குள விநாயகர் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று கடந்த 8- தேதி வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சந்தியாவின் பெற்றோர் பல்வேறு இடங்களில் இவரை தேடிப் பார்த்தனர். எங்கு தேடியும் இவர் கிடைக்கவில்லை. இது குறித்து சந்தியாவின் தந்தை சகாதேவன் புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சந்தியா என்ன ஆனார் எங்கு சென்றார் யாரேனும் கடத்தப்பட்டாரா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×