search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய வேளாண் மந்திரி"

    • கோதுமை உற்பத்தி மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
    • நாடு முழுவதிலும் உரங்களின் கையிருப்பு திருப்திகரமாக உள்ளது.

    தலைநகர் டெல்லியில் மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் இது குறித்து விளக்கம் அளித்த அவர் கூறியுள்ளதாவது:

    ரபி பருவகால பயிர் வகைகள் உற்பத்தி 358.59 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. கோதுமை உற்பத்தி 138.35 லட்சம் ஹெக்டேர் அளவில் இருந்து 152.88 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு அதிகரித்துள்ளது. அதாவது கோதுமை உற்பத்தி 14.53 லட்சம் ஹெக்டேர் அளவிற்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 4 வருடங்களில் இல்லாத மிகப்பெரிய உற்பத்தி அளவாகும்.

    மண் ஈரப்பதநிலை, தண்ணீர் வசதி மற்றும் உரங்களின் கையிருப்பு போன்ற சாதகமான சூழ்நிலையால் வரும் நாட்களில் ரபி பருவகால பயிர் வகைகளின் உற்பத்தி மேலும் அதிகரிக்கும். நாடு முழுவதிலும் உள்ள 143 முக்கிய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு கடந்த காலத்தைவிட 106 சதவீதம் அதிகமாக உள்ளது. நாடு முழுவதிலும் உரங்களின் கையிருப்பு நிலையும் திருப்திகரமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அனைவருக்கும் உகந்த ஆரோக்கியமான உணவை வழங்க வேண்டும்.
    • சிறு தானியங்களை பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைய வேண்டும்.

    மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தலைமையில் பிம்ஸ்டெக் நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பூடான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து நாடுகளின் வேளாண்துறை மந்திரிகள் இதில் பங்கேற்றனர். 


    காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய மந்திரி தோமர், வேளாண்துறை மாற்றத்திற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்த விரிவான பிராந்திய செயல் திட்டத்தை ஏற்படுத்த ஒத்துழைக்குமாறு உறுப்பு நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

    சிறுதானியங்கள் ஊட்டச்சத்துமிக்கது என்றும் அதை பிரபலப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் விளக்கினார். 2023-ம் ஆண்டு சர்வதேச சிறுதானிங்கள் ஆண்டாக கடைப்பிடிக்கப்பட உள்ள நிலையில், அனைவருக்கும் உகந்த வேளாண்முறையை கடைப்பிடித்து, ஆரோக்கியமான உணவை வழங்குமாறு உறுப்பு நாடுகளை அவர் வலியுறுத்தினார்.



    சிறு தானியங்களை ஒரு உணவாக பிரபலப்படுத்தும் இந்தியாவின் முயற்சியில் இணைந்து செயல்படுமாறும், இயற்கை மற்றும் சூழலியல் வேளாண்முறையில் உயிரி பன்முகத்தன்மையை பாதுகாப்பதுடன், ரசாயன பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

    ×