search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய திட்டங்கள்"

    மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களை பெற உதவுவதில் மாநில கவர்னர்கள் கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். #centralschemes #GovernorsConference #Modi
    புதுடெல்லி:

    அனைத்து மாநில கவர்னர்கள் பங்கேற்கும் 49-வது மாநாடு ஜனாதிபதி மாளிகையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  முதல் நாளான இன்று நாட்டின் முக்கிய விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடக்கவுரை ஆற்றினார்.

    பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மக்கள் அதிகபட்ச பலன்களை பெற உதவுவதில் மாநில கவர்னர்கள் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


    நமது நாட்டின் அரசியலமைப்பு முறை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தில் முதுகெலும்பாக கவர்னர் பதவி முக்கியப் பங்கு வகித்து வருகிறது. நமது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்களிப்பு முக்கியத்துவமானது. இவை யாவும் டிஜிட்டல் அருங்கட்சியகங்களில் கட்டாயமாக பதிவுசெய்து பாதுகாக்கப்பட வேண்டும்.

    பழங்குடியின மக்கள் அதிகமாக வாழும் மாநிலங்களின் கவர்னர்கள், இந்த மக்களுக்காக மத்திய அரசு செயல்படுத்திவரும் கல்வி, விளையாட்டு மற்றும் நிதியுதவி சார்ந்த திட்டங்கள் அவர்களை முழுமையான அளவில் சென்றடையும் வகையில் உதவி செய்ய வேண்டும் எனவும் மோடி குறிப்பிட்டார். #centralschemes #GovernorsConference #Modi
    ×