search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசின் ஜல்ஜீவன் மிஷன் திட்டம்"

    • வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
    • 6,49,977 வீடுகளில் 3,41,742 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    நாடு முழுவதும் கிராமப்புற மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட மத்திய அரசு, ஜல்ஜீவன் மிஷன் என்னும் திட்டத்தை கடந்த 2020-2021-ம் ஆண்டில் தொடங்கியது.இத்திட்டத்தின்கீழ் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து, இவற்றின் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    நிலத்தில் குழி தோண்டுதல், குழாய்கள் பதித்தல், குடிநீர் தொட்டிகள் கட்டுதல், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தமிழகத்தில் இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தற்காக மத்திய அரசு விருது வழங்கியது. சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 385 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஜல்ஜீவன் மிஷன் (ஊரக குடிநீர்) இயக்கத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வருகிற 2024-ம் ஆண்டிற்குள் குடிநீர் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.ஊரக பகுதிகளில் இதுவரை மொத்தம் உள்ள 6,49,977 வீடுகளில் 3,41,742 வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இது 52.58 சதவீதமாகும். மீதமுள்ள வீடுகளுக்கும் நேரடியாக பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×