search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை வாலிபர்"

    பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த மதுரை வாலிபர் யார் - யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை உறுதி படுத்துவதற்காக தமிழக போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    புதுடெல்லி:

    மதுரையைச் சேர்ந்தவர் முகம்மது ரஷீத். 40 வயதாகும் இவர் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து விடும் துரோகச் செயலை அவர் செய்து வந்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புக்கு அவர் பணம் திரட்டி கொடுப்பதாகவும் கூறப்பட்டது. பிரான்சில் கடந்த 2013-ம் ஆண்டு 2 பேரை மூளை சலவை செய்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டார்.

    அவரை பிரான்சு போலீசார் கைது செய்தனர். அவருக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பாரிசீல் உள்ள ஜெயிலில் அவர் தண்டனையை அனுபவித்து வந்தார்.

    முகம்மது ரஷித் தென் இநதியாவில் இருந்து நிறைய பேரை மூளைச் சலவை செய்து பாகிஸ்தானுக்கு அனுப்பி வைத்திருப்பதாக சந்தேகம் நிலவுகிறது. இதையடுத்து கூடுதல் விசாரணைக்காக அவரை ஒப்படைக்கும்படி பிரான்சிடம் இந்தியா கோரிக்கை விடுத்தது.

    அதன் பேரில் பிரான்சு அரசாங்கம் கடந்த வாரம் முகம்மது ரஷீத்தை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    பிறகு முகம்மது ரஷீத் தேசிய விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது இந்தியாவில் இருந்தும், பிரான்சில் இருந்தும் மத்திய கிழக்கு நாட்களுக்கு அவர் அனுப்பி இருப்பது தெரிய வந்தது.

    இது தவிர இந்தோனேசியாவில் பாலித்தீவில் 202 பேர் பலியான 2002-ம் ஆண்டு குண்டு வெடிப்புக்கும் முகம்மது ரஷீத்துக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கான விசாரணையும் நடந்து வருகிறது.

    இந்த நிலையில் முகம்மது ரஷீத் தமிழ்நாட்டில் யார்- யாருடன் தொடர்பில் இருந்தார் என்பதை உறுதி படுத்துவதற்காக அவர் தற்போது தமிழ்நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். #tamilnews

    ×