search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டைக்காடு பகவதியம்மன்"

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது.

    அதைத்தொடர்ந்து எட்டாம் கொடைவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அத்தாழபூஜை ஆகியவை நடைபெற்றது.

    இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். 
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு பெண்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சமய மாநாடு, வில்லிசை, பரதநாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

    6-ம்நாள் விழாவில் இரவு 12 மணிக்கு வலியபடுக்கை பூஜையும், 9-ம் நாள் விழாவில் இரவு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவையும் நடந்தது.

    10-ம் திருவிழாவான நேற்று முக்கிய பூஜையான ஒடுக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மண்டைக்காட்டில் குவிந்தனர். இதனால், கடற்கரை செல்லும் சாலை, மணலிவிளை, லெட்சுமிபுரம் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது.

    ஒடுக்கு பூஜையையொட்டி அதிகாலை 2 மணிக்கு மண்டைக்காடு சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் பவனி எடுத்து வரப்பட்டது. 3.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் எழுந்தருளல், 4.30 மணிக்கு அடியந்தர பூஜை, குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. அதைதொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்குபூஜை தொடங்கியது. பூஜையையொட்டி மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தா கோவிலில் இருந்து பூசாரிகள் 21 வகையான உணவு பதார்த்தங்களை 9 மண் பானைகள் மற்றும் பெட்டிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலம் கோவிலை அடைந்ததும் அம்மனுக்கு பதார்த்தங்கள் படைக்கப்பட்டன. இதற்கிடையே குருதி கொட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான ஒடுக்கு பூஜை இன்று நள்ளிரவு நடக்கிறது.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் சமய மாநாடு, யானை மீது களப பவனி, அன்னதானம், பஜனை, வில்லிசை, அம்மன் பவனி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. விழாவின் 6-வது நாள் இரவு வலியபடுக்கை பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நேற்று காலையில் பைங்குளத்தில் இருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலமும், காலை 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதலும், காலை 10 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் ஊர்வலமும் நடந்தது. மதியம் உச்சகால பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு அத்தாழ பூஜை, வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலம் போன்றவை நடந்தன.

    திருவிழாவின் இறுதி நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் பவனி வருதல் நடக்கிறது.

    தொடர்ந்து அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், குத்தியோட்டம் போன்றவை நடைபெறும். மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை போன்றவை நடக்கிறது. இந்த பூஜையில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    திருவிழாவையொட்டி நேற்று காலை முதலே பக்தர்கள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர். அவர்கள் கடற்கரைக்கு சென்று அங்கு கால் நனைத்துவிட்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பொங்கலிடும் மண்டபம், மணலிவிளை சாலை, லட்சுமிபுரம் செல்லும் சாலை, கடற்கரை சாலை போன்ற இடங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் மாசி கொடைவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சமயமாநாடு, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளி பல்லக்கில் வீதி உலா வருதல், வில்லிசை ஆகியவை நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று (திங்கட்கிழமை) இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவை நடக்கிறது.

    10-ம் திருவிழாவான நாளை (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு ஒடுக்கு பவனி மற்றும் ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மண்பானைகளில் வெள்ளை துணியால் மூடி, வாய்ப்பூட்டு கட்டிய பூசாரிகளால் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும். பின்னர், நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும். அதைதொடர்ந்து குருதி கொட்டும் நிகழ்ச்சி, ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இதை காண்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    முன்னதாக அதிகாலையில் சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக்குடம் எடுத்து வருதல், தொடர்ந்து அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளுதல், அடியந்தர பூஜை, குத்தியோட்டம், பிற்பகல் 2 மணிக்கு கடந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தீ வெட்டி ஊர்வலம் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.
    குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. பெண்களின் சபரிமலை என்றும் இந்த கோவில் அழைக்கப்படும். இத்தகைய சிறப்புமிக்க பகவதி அம்மன் கோவிலில் கடந்த 3-ந் தேதி மாசி திருவிழா தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜை, நவீன வில்லிசை, சமய மாநாடு, யானை மீது களப பவனி, கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு வலிய படுக்கை நடந்தது. நேற்று 7-வது திருநாளையொட்டி கோவிலுக்கு வந்த பெண் பக்தர்கள், கோவில் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கடலில் பாதத்தை நனைத்து அம்மனை தரிசனம் செய்தனர். கால் பாதத்தை நனைக்கும் போது ஏதும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்காக அங்கு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    9-ம் திருவிழாவான நாளை (திங்கட்கிழமை) அதிகாலை நடை திறக்கப்பட்டு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பைங்குளம் அனந்தமங்கலம் கண்டன் சாஸ்தா ஆலயத்தில் இருந்து சந்தனக்குடம் மற்றும் காவடி ஊர்வலம் புறப்படுகிறது. பின்னர் காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், 9.30 மணிக்கு இரணியலில் இருந்து யானை மீது சந்தனக்குடம் மற்றும் களபம் பவனி வருதலும் தொ டர்ந்து சமய மாநாடும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7 மணிக்கு சமய மாநாடு மற்றும் நலத்திட்ட உதவி வழங்குதல் நடக்கிறது. மாநாட்டுக்கு ஹைந்தவ இந்து சேவா சங்க தலைவர் கந்தப்பன் தலைமை தாங்குகிறார். 9 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், தொடர்ந்து தீ வெட்டி ஊர்வலம் நடக்கிறது.

    இந்த நிகழ்ச்சிக்கு திருக்கோவிலின் இணை ஆணையர் அன்புமணி தலைமை தாங்குகிறார். தீவெட்டி கமிட்டி தலைவர் ராஜகுமார், உதவி தலைவர் சந்தனகுமார், செயலாளர் செல்லம், உதவி செயலாளர் அய்யப்பன், பொருளாளர் விஜய ரங்கன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். முதல் விளக்கை மதுரை கூடுதல் மாவட்ட நீதிபதி ராஜவேல் ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து தீவெட்டி ஊர்வலம் கோவிலை சுற்றி வலம் வருகிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழாவுக்கான பந்தல் கால் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இங்கு பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவதால் இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

    இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை விழா வெகுவிமரிசையாக 10 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டு மாசிக்கொடை விழா வருகிற மார்ச் மாதம் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 12-ந் தேதி ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைகிறது.

    இதனை முன்னிட்டு மாசிக்கொடை பந்தல்கால் நாட்டுவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5 மணிக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 9.15 க்கு நிறை புத்தரிசி வழிபாடு, 10.15 மணிக்கு பந்தல் கால்நாட்டுதல் ஆகியவை நடந்தது. இதில் விஜயகுமார் எம்.பி., தேவசம் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மராமத்து என்ஜினீயர் அய்யப்பன், ஸ்ரீகாரியம் ஆறுமுகதரன் மற்றும் கைந்தவ இந்து சேவா சங்கம், ஸ்ரீதேவி கலாமன்றம், தேவி சேவாசங்கம் நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து சமய மாநாடு திடலில் இந்து சேவா சங்க 82-வது சமய மாநாடு பந்தல் கால் நாட்டு விழா நடந்தது. மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை, அன்னதானம், மாலையில் தீபாராதனை, இரவு அத்தாள பூஜை ஆகியவை நடைபெற்றன.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் பரிகார பூஜை தொடங்கியது. இந்த பூஜை 3 நாட்கள் நடைபெறுகிறது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கோபுரம் கட்டும் பணி நிறைவடைந்தது. தொடர்ந்து கோவில் திருப்பணிகள் நடந்து வருகிறது. திருப்பணிகளை விரைந்து முடித்து கலசாபிஷேகம் நடத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    கலசாபிஷேகம் நடத்துவதற்கு தேவபிரசன்னம் பார்க்கும் நிகழ்ச்சி கடந்த மாதம் 22-ந் தேதி நடந்தது. தேவ பிரசன்னத்தில் பல்வேறு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து தேவி சேவா சங்கம் ஏற்பாட்டில் பரிகார பூஜைகள் நேற்று தொடங்கியது.

    இந்த பூஜைகள் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.

    நேற்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து புண்யாகம், மகா மிர்த்திஞ்ஜய ஹோமம் போன்றவை நடந்தது. பரிகார பூஜையை பாறசாலை ராஜேஷ் நம்பூதிரி, ஸ்ரீநிவாசன் ஆகியோர் நடத்தினர். இதில் கோவில் தந்திரி மகா தேவரு அய்யர், தேவி சேவா சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், உக்ர நாசிம்க ஹோமம், மாலை 5 மணிக்கு மகா சுதர்சன ஹோமம், உச்சாடனம் போன்றவையும், நாளை காலையில் கணபதி ஹோமம், நவ கலசபூஜை, பரிகார கலசபூஜை, மதியம் சிறப்பு உச்ச பூஜை ஆகியவையும் நடக்கிறது. 
    ×