search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண்டல அளவிலான"

    • ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது.
    • இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:

    ஈரோடு வ.உ.சி. விளையாட்டு மைதானத்தில் தீயணைப்பு வீரர்களுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டி நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களை சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

    இவர்கள் அனைவரும் ஈரோடு பஸ் நிலையம் அருகேயுள்ள மாநகராட்சி மண்டபத்தில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    நாளை காலை தீயணைப்பு வீரர்களுக்கு துறை ரீதியான திறன் மேம்பாட்டு போட்டிகளும், மாலை முதல் கூடைபந்து, இறகுபந்து, கைப்பந்து, குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 மீ, 400 மீ, 1500 மீட்டம் ஓட்டம் நடக்கிறது.

    போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 2 இடத்தை பிடிப்பவர்கள் மாநில விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ், ரொக்க பரிசு வழங்கப்படும்.

    2 நாட்களும் மாலையில் பாட்டு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும். நாளைமறுநாள் மாலை தீயணைப்பு வீரர்கள் அணிவகுப்பும் நடக்கிறது.

    இந்த போட்டிகள் மேற்கு மண்டல தீயணைப்பு துறை இணை இயக்குனர் சத்திய நாராயணன் தலைமையில் நடக்கிறது.

    ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் என்ற முறையில் நான் போட்டிகளை ஒருங்கிணைக்கிறேன். போட்டி நடுவர்களாக போலீஸ் அதிகாரிகள் செயல்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோட்டில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டிக்கு செல்லும்சேலம் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது.
    • ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது.

    சேலம்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூரில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் கோவை மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி நடக்கிறது. இதில் சேலம் மாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா நேற்று சேலத்தில் நடந்தது.

    சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர் சண்முகவேல் வரவேற்று பேசினார்.

    தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கி, வீரர்களுக்கு பயணப்படி மற்றும் ஊக்கத்தொகை வழங்கி வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினார். இந்த நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அகிலாதேவி, ராஜாராம் இணைச் செயலாளர் வடிவேல், தொழிலதிபர் விஜயராஜ், வளர்ச்சி குழு தலைவர் வேங்கையன், நிர்வாகி நந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×