search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணிப்பூர் சட்டசபை"

    • 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
    • காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    இம்பால்:

    மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கிறது.

    இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு பலியானார்கள். ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்தனர்.

    இதற்கிடையே பரபரப்பான சூழ்நிலையில் மணிப்பூர் சட்டசபையின் ஒருநாள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 3 மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் கலவரத்துக்கு பிறகு முதல் முறையாக சட்டசபை கூடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    சபை கூடியதும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இந்த கூட்டத் தொடரை 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என்று கூறி அமளியில் ஈடுபட்டனர். மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கு ஒருநாள் போதாது என்று அவர்கள் தெரிவித்தனர்.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமளி காரணமாக மணிப்பூர் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

    மணிப்பூர் சட்டசபையில் குகி இனத்தை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று சட்டசபைக்கு வராமல் புறக்கணித்தனர்.

    • ஒருநாள் சட்டசபை கூட்டத்திற்கு குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு எதிர்ப்பு
    • நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது

    மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கு இடையிலான மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையில் 170 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அமைதி நிலவி வருகிறது. புலம்பெயர்ந்தவர்களை, அவர்களது சொந்த இடத்தில் மீண்டும் அமர வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று மணிப்பூர் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இன்று ஒருநாள் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர் வன்முறை தொடர்பான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, ஒருநாள் கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி-ஜோமி பழங்குடியின அமைப்பு, கலந்து கொள்ளமாட்டோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சமூகத்தினரை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டோம் என அறிவித்துள்ளனர்.

    தற்போதைய சூழ்நிலையில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக வாழும் இம்பால் பகுதிக்கு செல்வது பாதுகாப்பனது அல்ல எனத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றம் இம்பாலில்தான் உள்ளது. நாகா எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.

    சட்டசபை கூட்டத்தை நடத்த தடைவிதிக்க குகி-ஜோமி சமூகத்தினர் கவர்னருக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில், அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.

    பிப்ரவரி- மார்ச் மாதத்தில் பட்ஜெட்டிற்கு செசனுக்காக சட்டமன்றம் கூடியது. அதன்பின் தற்போது ஒருநாள் கூட இருக்கிறது.

    • மணிப்பூரில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகும்.
    • தற்போது 5 எம்.எல்,ஏக்கள் பா.ஜ.கவில் சேர்ந்து உள்ளதால் சட்டசபையில் ஆளும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் பலம் 37-ஆக உயர்ந்து உள்ளது.

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகிய ஐக்கிய ஜனதாதளம், லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதாதளம் மற்றும் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது.

    முதல்-மந்திரியாக நிதிஷ்குமார் மீண்டும் பதவி ஏற்றார். அவர் பா.ஜனதா மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறினார்.

    இந்த நிலையில் நிதிஷ் குமாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மணிப்பூரில் ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்களை பா.ஜனதா தன் பக்கம் இழுத்துள்ளது. இக்கட்சியில் மொத்தம் 6 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

    இதில் ஜாய்கிஷன் சிங், நுதிர் சங் துர்சனதே, அசத் உதின், தங்ஜாம் அருண் குமார், கவுதே ஆகிய 5 பேர் பா.ஜனதாவில் இணையப் போவதாக அறிவித்து உள்ளனர்.

    டெல்லிக்கு சென்ற அவர்களை மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் உற்சாகமாக வரவேற்றார். மீதமுள்ள ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏவும் விரைவில் அக்கட்சியை விட்டு விலகி பா.ஜ.க.வில் சேருவார் என கூறப்படுகிறது,

    மணிப்பூரில் மொத்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 60 ஆகும். தற்போது 5 எம்.எல்,ஏக்கள் பா.ஜ.கவில் சேர்ந்து உள்ளதால் சட்டசபையில் ஆளும் பா.ஜனதா கட்சி உறுப்பினர்களின் பலம் 37-ஆக உயர்ந்து உள்ளது.

    பா.ஜனதாவின் இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய ஜனதா தளம் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய தலைவர் ரஞ்சன்சிங் கூறியதாவது:-

    டெல்லி, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பா.ஜனதா என்ன செய்ததோ அதைதான் மணிப்பூரிலும் செய்து உள்ளது.

    எங்கள் எம்..எல்.ஏ.க்களை பேரம் பேசி விலைக்கு வாங்கி உள்ளனர். 2023-ம் ஆண்டு தேசிய அளவில் எங்கள் கட்சி மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×