search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மடோனா"

    • அவர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
    • மடோனாவின் பாக்டீரியா தொற்றுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

    பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64). சில நாட்களுக்கு முன் இவரது உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. மயக்கமடைந்த அவரை உடனடியாக நியூயார்க் நகரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது.

    மடோனாவிற்கு, ஏற்பட்ட "தீவிர பாக்டீரியா தொற்று" குறித்து முதலில் அவரது மேலாளர் தகவல் பகிர்ந்தார். கடும்தொற்றால் அவர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதால், அவர் குடும்பத்தினர் மட்டுமல்லாது அவரின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், தீவிர சிகிச்சைக்குப் பிறகு, மடோனா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது வீட்டில் இருக்கிறார் என்றும் அவர் நலமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    அவர் வரும் வாரங்களில் 7-மாத உலக சுற்றுப்பயணத்தை தொடங்கவிருந்தார். ஆனால், நோய் தொற்று சிகிச்சையினால் அவர் அதை ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

    அவர் நலமாக தனது வீட்டிற்கு ஒரு தனியார் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தனது உடல்நலம் சார்ந்த விஷயங்களில் செய்திகள் எதுவும் வெளியிட விரும்பாத மடோனா, தனது விரிவான உலகச் சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக ஒத்திகையின் இறுதிக் கட்டத்தில் இருந்தார்.

    இரண்டு வாரங்களில் கனடாவில் "செலிப்ரேஷன் டூர்" என்ற பெயரில் உலகெங்கிலும் உள்ள 45 நகரங்களுக்கு செல்வதற்காக அவர் திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்பட்டார். இசைத்துறையில் ஈடுபட்டு 40 ஆண்டுகள் ஆவதை கொண்டாடவிருந்த இந்த பயணம் திட்டமிட்டபடி நிகழ்ந்திருந்தால், இது அவரது 12வது சுற்றுப்பயணமாக அமைந்திருக்கும்.

    மடோனாவிற்கு உடல்நலம் குறைந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி வந்ததிலிருந்து உலகெங்கிலும் இருந்து அவர் பூரண நலமடைய வாழ்த்துக்கள் வந்தவண்ணம் இருந்தன.

    மடோனாவின் பாக்டீரியா தொற்றுக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் மருத்துவர்கள் இது மிகவும் தீவிரமானதாகவும் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை தேவைப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

    • பாடகி மடோனா சில நாட்களுக்கு முன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    • மடோனாவிற்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் சிகிச்சை வழங்கப்பட்டது. பின்பு அதை மருத்துவர்கள் அகற்றினர்.

    பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் அமெரிக்க பாடகி மடோனா (64). இவரது பாடல்களுக்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

    பாடகி மடோனா சில நாட்களுக்கு முன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு ஐ.சி.யூ. பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது. பின்பு அதை மருத்துவர்கள் அகற்றினர். அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார்.

    பாடகரின் குடும்ப உறவினர் ஒருவர், "கடந்த இரண்டு நாட்களாக, இது (மடோனாவின் உடல்நிலை) எந்த திசையில் திரும்ப போகிறது என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது. அவரது குடும்பத்தினர் எந்த மோசமான செய்திக்கும் தயாராகி வருகின்றனர்" என கூறினார்.

    கனடா நாட்டின் வேன்கூவர் நகரில், "செலிப்ரேஷன் டூர்" என்ற பெயரில் ஜூலை 15 2023 முதல் ஜனவரி 30 2024 வரை ஒரு உலக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்த "பாப் புயல்" மடோனாவிற்கு, திடீரென ஏற்பட்ட தீவிர தொற்று நோய் காரணமாக அப்பயணம் உடனடியாக ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×