search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நலத்திட்டங்கள்"

    • கலெக்டர் பங்கேற்பு
    • 15 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.09 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிக்கான ஆணை வழங்கப்பட்டது

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் இந்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சக மத்திய மக்கள் தொடர்பு மற்றும் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் இணைந்து மத்திய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மத்திய மக்கள் தொடர்பகம் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.மத்திய மக்கள் தொடர்பகம் சென்னை இயக்குனர் காமராஜ், திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை லோகநாயகி, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தென்கடப்ப ந்தாங்கல்ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைமணி வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: மத்திய மாநில அரசுகள் இணைந்து மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

    மத்தியஅரசானது மக்களுக்கு அடிப்படை வசதிகளான உணவு, இருப்பிடம், சாலை வசதி ஆகியவற்றிற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மத்திய அரசின் திட்டங்களை ஒவ்வொரு அரசும் எத்தனை சதவீதம் சரியாக பயன்படுத்தியுள்ளது என்பதை சரியாக சொல்லும் அளவிற்கு தகவல் தொழில்நுட்ப தொடர்பு வசதி வளர்ந்துள்ளது.

    ஒரு கிராமத்தில் குறிப்பிட்ட மத்திய அரசின் திட்டமானது எந்த தலைப்பின் கீழ் எவ்வளவு சதவீதம் நடைபெற்று வருகின்றது என்பதை நாம் இணைய வசதிகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் மாற்றுத்தி றனாளிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் மத்திய மாநில அரசுகளின் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    கிராமத்தில் உள்ளவர்கள் பொருளாதாரத்தில் முன்னேற மத்திய மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அதில் குறிப்பாக மருத்துவ காப்பீட்டு அட்டைகள், வீடு கட்டுவதற்கான ஆணை, மாடு வாங்குவதற்கும், விவசாய உற்பத்தி கடன், மாடு கொட்டகை அமைப்பதற்கும் இது போன்ற பல்வேறு திட்டங்கள் அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெற்று இருந்தால் நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 51 சதவீதம் நபர்கள் இரும்பு சத்து குறைவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கான நிவாரணி முரங்கைக் கீரையை அனைவரும் உட்கொள்ள வேண்டும்.இதன் மூலம் அனைத்து வித உடல்நல பிரச்சினைகளிலிருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும்.ஆரோக்கியமான சமுதாயத்தை படைக்க நாம் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

    நிகழ்ச்சியில் 15 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.1.09 கோடி மதிப்பில்லான வங்கி கடன் உதவிக்காண ஆணைகளையும், 35 மகளிர்களுக்கு தாட்கோ வங்கியின் மூலம் ரூ.50.75 லட்சம் மதிப்புள்ளான கறவை மாடு வாங்குவதற்கான கடன் உதவிகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் சார்பில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு பரிசுகளையும், வாலாஜா அறிஞர் அண்ணா அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நன்றாக படிக்கும் மாணவிகளுக்கு பரிசுகளையும் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

    மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.மேலும் மத்திய அரசின் இந்திய ஆட்சி பணியில் சேர்ந்துள்ள 8 இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பயிற்சி எடுத்துக் கொண்டனர். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை, முன்னோடி வங்கி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை ஆகிய துறைகளின் மூலம் மத்திய அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து திட்ட விளக்கவுரை யாற்றப்பட்டது.

    இதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறையின் மூலம் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மத்திய மக்கள் தொடர்பகம் வேலூர் கள விளம்பர உதவி அலுவலர் ஜெயகணேஷ், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், உள்பட மகளிர் குழுவினர், கல்லூரி மாணவிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×