search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகா கும்பாபிஷேக விழா"

    • வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.
    • 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி பகுதியில் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பூங்காவ னத்தம்மன் கோவி லில் மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது.

    முன்னதாக 24- ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 5- மணிக்கு மகாகணபதி பூஜை, கலச பூஜை, விநாயகா நவகிரஹா, ருத்ரா மற்றும் சாந்தி ஹோம மஹா பூர்ணா குதி நடைபெற்றது.

    பின்னர். அதனை தொடர்ந்து சாமிக்கு 500-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி மற்றும் பால் குடங்கள் சுமந்து மேளதா ளங்கள் முழங்க ஊர்வலமாக சென்று பாலாபிஷேக தீபாராதனையுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன'

    அதனையடுத்து 9 மணிக்கு மேல் யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்களை எடுத்துக் கொண்டு கோவிலை சுற்றி வந்து ராஜ கோபுரம் மற்றும் விமான கோபுரம் ஆகிய கலசங்களுக்கு ஆச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றன.

    அப்போது வானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டது. பின்னர் மூலவர் சிவன், பூங்காவ னத்தம்மனுக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    இக்கும்பாபிஷேக விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்துக் கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதா னம் வழங்கப் பட்டது. இதற்கான ஏற்பா டுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்தி ருந்தனர் விழாவிற்காக 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடத் தப்பட்ட னர்

    • கோபுரத்தின் மீது உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
    • கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    மாரண்டஅள்ளி, 

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளியில் ஸ்ரீ அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெ ற்றது.

    இதையொட்டி கடந்த 8-ம் தேதி கங்கா பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து வருதல். மங்கல இசை விக்ரஹம் ஆவாஹனம் ஆச்சாரய அழைப்பு பகவத் பிரார்த்தனை யஜமானர் சங்கல்பம் புண்யாவாசனம் உள்பட யாகங்கள் வளர்க்க ப்பட்டு அக்னி ஆராதனம் செய்யப்பட்டு கும்ப பிரதிஷ்டை நடைபெற்றது.

    இதனையொட்டி நூதன விக்கிரஹம் பிரதிஷ்டை அஷ்டபந்தனம் சாற்றுதலும், திருமஞ்சனம், அபிஷேகம், பூர்ணாகஹதி, யாகசாலை, ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவின் யாக சாலையில் இருந்து தீர்த்த குடத்தை தலையின் மீது எடுத்து கோபுரத்தின் மீது உள்ள கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீரை பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. இதனையடுத்து ஸ்ரீ அங்காளம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.

    சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அங்காளம்மன் பக்தர்களுக்கு அருள் பாலி த்தார். இந்த விழாவை யொட்டி மாரண்டஅள்ளி சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து சுமார் 5 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். பக்தர்கள் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பான அன்னதானம வழங்கப்பட்டது.

    • வாசனம், வாஸ்து ஹோமம், கங்கணம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மாதேமங்கலம் கிராமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ தீப்பாஞ்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக பெருவிழா நேற்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

    இதற்கு முன்னதாக கடந்த 28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு மேல் கணபதி பூஜை,புண்யாஹ வாசனம், வாஸ்து ஹோமம், கங்கணம் கட்டுதல் மற்றும் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து 29 ம் தேதி ஐந்து நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் மற்றும் முளைப்பாரி நிகழ்ச்சியும் இரவு மகா கணபதி, சுப்ரமணியசாமி, தீப்பாஞ்சம்மன், மலையப்பன், பாப்பாத்தி அம்மன், மற்றும் நவகிரக மூர்த்திகளுக்கு அஷ்டபந்தனம் சாற்றி மகா பிரதிஷ்டை நடைபெற்றது.

    30 ம் தேதி விடியற்காலை காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், சுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீ தீப்பாஞ்சம்மன், மலையப்பன், மற்றும் பாப்பாத்தி அம்மன் சாமிகளுக்கு ஹோமம், நவகிரக ஹோமம், துர்கா ஹோமம், ஹிரண்ய கால ஹோமம், நடைபெற்றது. காலை ஆறு முப்பது மணிக்கு மங்கள வாத்தியம் முழங்க சுவாமிகளின் தீர்த்த குடம் புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து 7 மணி முதல் 7.30 மணிக்கு குருக்கள் தீர்த்த குடம் எடுத்து வந்து ஸ்ரீ பாஞ்சி அம்மன் மலையப்பா சாமி பாப்பாத்தி அம்மன் சாமிகளுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை தலைவர் குப்புசாமி, கப்பல் துறை கண்காணிப்பாளர், கௌரவ தலைவர் பிரகாஷ் ஸ்ரீ கிருஷ்ணா ரியல் எஸ்டேட், செயலாளர் அன்பரசன், மதன்குமார், மற்றும் கும்பாபிஷேக விழா நிர்வாக குழு உறுப்பினர்கள் சுந்தரம், கந்தசாமி, மாணிக்கம், பெருமாள், சுந்தரம் எக்ஸ் ஆர்மி, பொன்ராஜ், ராஜாராம், மகாலிங்கம், சத்தியசேகர், கணேசன், முருகவேல், ரவிச்சந்திரன், அம்பேத்வளவன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் இவ்விழா வினை தலைமை ஏற்று நடத்தி வைத்தனர்.

    • கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.
    • தீர்த்தக்குடம் முளைப்பாரி அழைத்தல் புதிய சுவாமி உருவ சிலை கறி கோள் உற்சவம் நி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூர் அருகே உள்ள பழைய புதுரெட்யூரில் ஸ்ரீதேவி ஸ்ரீ பூதேவி ஸ்ரீ வெங்கடேசபெருமாள் கோவில் நூதன ஆலய அஸ்தபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    கடந்த 8-ந்தேதி விநாயகர் பூஜை விக்னேஸ்வரா பூஜை ஆகியவை தொடர்ந்து கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    ஞாயிற்றுக்கிழமை தீர்த்தக்குடம் முளைப்பாரி அழைத்தல் புதிய சுவாமி உருவ சிலை கறி கோள் உற்சவம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து அன்னதானமும் விமான கோபுர கலச வைத்தல் எந்திர ஸ்தாபனம் அஸ்தபந்தன மருந்து சாற்றுதல்நிகழ்ச்சிகள் நடந்தது.

    நேற்று காலை மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை கும்பாபிஷேக திரு விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டினர்.
    • கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    பாலக்கோடு,

    பாலக்கோடு அடுத்த மல்லசமுத்திரம் கிராமத்தில் உள்ள எல்லம்மன் கோவில் மகாகும்பாபிஷேக பெருவிழா நடைப்பெற்றது.

    இந்த விழா கடந்த 7-ம்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இன்று அதிகாலை யாகசாலையில் அக்னி குண்டம் வளர்க்கப்பட்டு யாகங்கள் நடந்தேறியது.

    அதனை தொடர்ந்து கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்திஹோமம், புண்யா ஹவாசனம், கோ பூஜை , மூலவர் அபிஷேகம் நடைப்பெற்றது.

    இதையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தம் மற்றும் பால் குடத்தை கோவில் நிர்வாகிகள் எடுத்து சென்று கோயில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்து தீபாரதனை காட்டின ர். பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதனையடுத்து எல்லம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தவிழாவையொட்டி பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெல்ரம்பட்டி, சீரியம்பட்டி, சோக்காடி, பொப்பிடி ஆகிய கிராமத்தை சேர்ந்த குலதெய்வ குடும்பத்தார் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹதி நடந்தது.
    • விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே ஜோதிப்பட்டி கிராமத்தில் 400 வருட பழைமையான ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வேடியப்பன், ஸ்ரீ முத்துவேடியம்மாள், ஸ்ரீஈஸ்வரன், ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீ காளியம்மன், ஐயனார் நவக்கிரகம், நாகர் ஆகிய கோவில்களின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.

    இந்த விழா நேற்று முன்தினம் 11-ந் தேதி கணபதி பூஜையுடன்தொடங்கியது. இன்று அதிகாலை கலச ஆராதனை, நவகிரக ஹோமம், பஞ்ச சூக்தஹோமம், துர்கா சாஸ்திர நாமம், மகா சாந்திஹோமம், வேத பாராயணம், பூர்ணாஹதி நடந்தது.

    இதனையடுத்து யாகசாலையிலிருந்து புனித நீர் கலச தீர்த்தத்தை ஊர் கவுண்டர்கள், முக்கியஸ்தர்கள் தங்கள் தலைமீது எடுத்து சென்று கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் திருக்குட நன்னீராட்டு செய்து தீபாரதனை காட்டினார்.

    பின்னர் கலசத்திற்கு ஊற்றிய புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    இதனையடுத்து ஶ்ரீ விநாயகர், ஸ்ரீ வேடியப்பன், ஸ்ரீ முத்துவேடியம்மாள், ஸ்ரீஈஸ்வரன், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ காளியம்மன், ஐயனார் நவக்கிரகம், நாகர் ஆகிய சுவாமிக்கு பல்வேறு திரவியங்கள், பூக்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது. அம்மன் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்தவிழாவையொட்டி காலை முதல் பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

    ×