search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் கலைக்கல்லூரி"

    • ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் என மொத்தம் 5 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.
    • அரசு பெண்கள் கல்லூரி, கொன்சேகா கல்லூரி, பி.எஸ்.வி கல்லூரி உள்பட பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில், கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் திருவிழா நடந்தது.

    இதற்கு கலெக்டர் கே.எம்.சரயு தலைமை தாங்கினார். செல்லகுமார் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் இளைஞர் திருவிழாவை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து கலை விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    சுதந்திரா இந்தியாவின் அமுதப் பெருவிழாவை முன்னிட்டும், இளை ஞர்களின் பன்முகத்தன்மையை வெளி கொணரவும், வளர்ச்சியடைந்த இந்தியா அடிமை மனோபாவத்தை நீக்குதல் நமது பாரம்பரியம் மற்றும் கலாசார பெருமைகளை உணர்த்தவும் நாட்டு மக்களிடையே தங்கள் கடமைகளை உணர்த்தும் வகையில் இளையோர் கலைவிழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில் ஒருங்கிணைந்த திட்ட விளக்க கண்காட்சி, சர்வதேச சிறு தானிய கண்காட்சி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாக்காளர் சேவை விழிப்புணர்வு மையம் மற்றும் மகளிர் திட்டம் சுய உதவிக்குழு போன்ற விழிப்புணர்வு கண்காட்சி களை கலெக்டர் பார்வை யிட்டார்.

    மேலும் இளைஞர் கலை விழாவை முன்னிட்டு இளைஞர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் என மொத்தம் 5 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், அரசு பெண்கள் கல்லூரி, கொன்சேகா கல்லூரி, பி.எஸ்.வி கல்லூரி உள்பட பல்வேறு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞர் அலுவலர் பிரேம் பரத்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரி சங்கர், கிருஷ்ணகிரி அரசு பெண்கள் கலைக்கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ், நேரு யுவகேந்திரா உதவி அலுவலர் அப்துல் காதர், வேளாண் அறிவியல் மைய தலைவர் சுந்தர்ராஜ், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வள்ளிசித்ரா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

    ×