search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் அணி நிர்வாகிகள்"

    நடிகர் ரஜினிகாந்த மாவட்ட செயலாளர்கள், அடுத்து இளைஞரணி செயலாளர்களை தொடர்ந்து இன்று காலை மகளிர் அணி செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Rajinikanth #RajiniMakkalMandram
    சென்னை:

    அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினி அறிவித்தார். இதனை தொடர்ந்து கட்சியை கட்டமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    முதல் கட்டமாக தமிழ்நாடு முழுக்க மாவட்ட செயலாளர்கள், இளைஞரணி செயலாளர்கள், மகளிர் அணி செயலாளர்கள் என அனைத்து பொறுப்புகளுக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டனர்.

    இந்த நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட செயலாளர்கள், அடுத்து இளைஞரணி செயலாளர்களை தொடர்ந்து இன்று காலை மகளிர் அணி செயலாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.


    இதற்கு முந்தைய சந்திப்புகளை போலவே இதிலும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ரஜினிக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு காலையிலேயே வந்த மகளிர் அணியினருடன் மாநில நிர்வாகிகளான வி.எம்.சுதாகர், ராஜு மகாலிங்கம் ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

    பின்னர் ரஜினியின் இல்லமான போயஸ் கார்டனுக்கு மகளிர் அணியினர் அழைத்து செல்லப்பட்டனர். இதன் பின்னர் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

    இதற்கிடையே ரஜினி மக்கள் மன்றத்திலும் புகார்கள் குவிய தொடங்கியுள்ளன. அதனை கண்காணிக்க 6 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது. டாக்டர் இளவரசன், ராமதாஸ், கோவிந்தராஜ், துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த குழு மாதம் ஒருமுறை கூடி புகார்கள் பற்றி விசாரிக்கும்.

    ரஜினி என்றாவது ஒருநாள் அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் அவரது உண்மையான ரசிகர்கள்.

    மக்கள் மன்ற நிர்வாகிகள் நிமயனத்தில் அந்தந்த பகுதிகளில் செல்வாக்கு மிக்கவர்களுக்கே முக்கியத்துவம் தரப்படுவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    நாளொன்றுக்கு குறைந்தது நூறு புகார்களாவது வந்துவிடுகிறது என்கிறார் நிர்வாகி ஒருவர். கடந்த வாரம் ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் ஒருவர் மீதே புகார் கூறப்பட்டுள்ளது. #Rajinikanth #RajiniMakkalMandram
    ×