search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரரின்"

    • திருப்பதிக்கு நேர்த்திக்கடன் செலுத்த சென்ற போது திடீர் கட்டுபாட்டை இழந்த கார் சுவற்றில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரரின் தாயார் பலியானார்.
    • இதுகுறித்து எம்.ஆர்.பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வினோத்குமார்(35). இவர் வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரண்யா (30). இவர்களுக்கு மிதுன் (12), சஞ்சீவ் (6) என இரண்டு மகன்கள் உள்ளனர்.

    சம்பவத்தன்று இரவு வினோத்குமார் இரண்டு நாட்கள் விடுப்பு எடுத்து திருப்பதி கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தனது மனைவி, மகன்கள், தாய் தேவி(55). மைத்துனர் குணசீலன் ஆகியோருடன் காரில் திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். காரை வினோத்குமார் ஓட்டி சென்றார்.

    ஆந்திரா மாநிலம் பூதலப்பட்டு நாயுடுபேட்டை தேசிய நெடுஞ்சாலையில் மல்லவரம் அருகே சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓட தொடங்கி அங்குள்ள சாலையின் தடுப்பு சுவரில் கார் பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சரண்யா, மூத்த மகன் மிதுன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். வினோத்குமாருக்கு காலிலும் நெஞ்சு பகுதியில் அடிபட்டது. அவரது தாய் தேவிக்கு கை, கால் மட்டும் நெஞ்சு பகுதியில் காயமும், மற்றொரு மகன் சஞ்சீவிக்கு தலையிலும் அடிபட்டது. மைத்துனர் குணசீலனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த எம். ஆர் பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காய்மடைந்த அனைவரையும் மீட்டு திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை–க்காக அனுமதித்தனர்.

    இதில் உயிரிழந்த சரண்யா, மிதுன் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து ஈரோடு மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சரண்யா, மிதுன் உடல் நேற்று இரவு திருப்பதியில் இருந்து ஈரோட்டில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இருவரது உடல்களையும் பார்த்து உறவினர்கள் அழுதனர்.

    இந்நிலையில் திருப்பதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத் குமாரின் தாய் தேவி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் மேலும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தேவியின் உடல் இன்று இரவு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ×