search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஏட்டு தலைமறைவு"

    அரும்பாக்கத்தில் விபசார அழகியுடன் இணைந்து செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஏட்டு தலைமறைவானதை அடுத்து அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. #Policeconstable
    சென்னை:

    சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுடன் சேர்ந்து கோயம்பேடு போலீஸ் ஏட்டு பார்த்திபன் விபசார தொழிலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாடி பகுதியைச் சேர்ந்த கால்டாக்சி டிரைவரான விஸ்வநாதன் ஜெயந்தியின் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து விட்டு பணம் கொடுத்தபோது, அந்த பணம் போதாது. மேலும் தர வேண்டும் என்று விபசார அழகியான ஜெயந்தி கேட்டதால் இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதுபற்றி ஏட்டு பார்த்திபனுக்கு ஜெயந்தி தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் ரெய்டுக்கு செல்வது போல சென்று மிரட்டல் விடுத்தார்.

    பின்னர் விஸ்வநாதனின் மோட்டார்சைக்கிளை பறித்து வைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டல் விடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த விஸ்வநாதன் செய்வதறியாமல் தவித்தார்.

    பின்னர் விஸ்வநாதன் மீது ஜெயந்தி போலீசிலும் புகார் அளித்தார். அதில் தன்னிடமிருந்து விஸ்வநாதன் பணப்பையை பறித்துக் கொண்டதாக கூறி இருந்தார்.

    ஆனால் போலீஸ் விசாரணையில் விஸ்வநாதன் போலீஸ் ஏட்டு ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டினார் என்று கூறியதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    ஜெயந்தியின் செல்போனை வாங்கி அவர் யார்-யாரிடம் பேசியுள்ளார் என்பதை ஆய்வு செய்தனர். அப்போது ஜெயந்தி ஏட்டு பார்த்திபனிடம் பலமுறை தொடர்பு கொண்டு பேசி இருப்பது அம்பலமானது. இதன் பிறகே இருவரது லீலைகளும் வெளிச்சத்துக்கு வந்தன. ஜெயந்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஏட்டு பார்த்திபன் மீது விபசார வழக்கு போடப்பட்டது. வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளும் பாய்ந்தன.

    ஜெயந்தி மீதும் அதே சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெயந்தி புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஏட்டு பார்த்திபன் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பார்த்திபனை தேடி கண்டுபிடித்து கைது செய்ய உயர் போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    இதனையடுத்து அவரை பிடிக்க 2 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை முடக்கி விட்டுள்ளன.

    ஏட்டு பார்த்திபன் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள நிலையில் சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் தீவிரமாகி உள்ளதால் ஏட்டு மீதான பிடி இறுகி உள்ளது.
    ×