search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில் ஒப்படைப்பு"

    • செட்டிக்குளம் பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார்
    • கொலுசை தவற விட்ட பெண் பக்தர்கள் உரிய அடையாளம் கூறி கொலுசை பெற்று செல்லலாம்

    கன்னியாகுமரி :

    நாகர்கோவில் அருகே பட்டகசாலியன்விளையை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 57). இவர் செட்டிக்குளம் பகுதியில் மர அறுவை ஆலை நடத்தி வருகிறார். ஆடி செவ்வாய்க்கிழமை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இவர் நேற்று காலை மண்டைக்காடு கோவிலுக்கு குடும்பத்துடன் வந்திருந்தார்.

    கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது, விநாயகர் கோவில் அருகில் ஒரு பவுன் தங்க கொலுசு கிடந்ததை கண்டு எடுத்தார். உடனே அவர் மண்டைக்காடு போலீசில் ஒப்படைத்தார். அவரது நேர்மையை போலீசார் பாராட்டி னர். கோவில் வளாகத்தில் கொலுசை தவற விட்ட பெண் பக்தர்கள் உரிய அடையாளம் கூறி கொலுசை பெற்று செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    • 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார்
    • கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .

    கடலூர்:

    கடலூரில் இருந்து நேற்று மாலை 4.10 மணி அளவில் சேலத்தில் இருந்து புதுவைக்கு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சில் ஏறக்குறைய 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்த பஸ் கடலூர் செம்மண்டலத்துக்கு வந்த போது 2 வயது குழந்தையு டன் வந்த இளம் பெண் ஒருவர் பஸ்சில் ஏறினார். அவருக்கு கண்டக்டர் சீட்டு கொடுத்தார். ஆனால் அந்த பஸ் கடலூர் கலெக்டர் அலுவ லகத்தை தாண்டியதும் அந்த பெண் எதிர் சீட்டில் வாலிபருடன் உட்கார்ந்து இருந்த இளம்பெண்ணிடம் செல்போனை வாங்கி பேசினார். போன் பேசி முடித்து அந்த பெண்ணி டம் செல்போனை கொடுத்து விட்டார் .அதற்கு பிறகு அவர் நீங்கள் என்ன காதல் ஜோடிகளா என்று கேட்டார் .நீங்கள் காதல் ஜோடிகளாக இருந்தால் உருப்பட மாட்டீர்கள் என்று திரும்பத் திரும்ப சொன்னார். ஆனால் இதற்கு பதிலாக இளம் பெண் எந்த வார்த்தையும் சொல்லவில்லை. குழந்தை உடன் வந்த இளம் பெண் அவர்கள் இருவரையும் பார்த்து நாகரிகம் அற்ற முறையில் ஆபாசமாக திட்ட தொடங்கி விட்டார்.

    இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பஸ் கண்டக்டரிடம் தெரிவித்தனர். அவரும் பஸ் டிக்கெட்டை என்னிடம் கொடுத்து விட்டு இறங்கி விடுங்கள் என்றார். ஆனால் அந்த பெண் டிக்கெட் டை கண்டக்டரிடம் கொடு க்காமல் வாக்குவாதம் செய்தார். எனக்கு ரூ. 20 செலவானாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த இடத்தில் இறங்கிக் கொள்ளுங்கள் என்று கண்டக்டர் கூறினார் ஆனாலும் அந்த பெண் கண்டக்டர் சொல்வதை ஏதும் கேட்காமல் தகராறு செய்து கொண்டே பஸ்சில் வந்து கொண்டி ருந்தார் .

    இந்த பஸ் கடலூர் ஆல் பேட்டை சோதனை சாவடி அருகே வந்தது. அப் போது அந்த பெண்ணிடம் மீண்டும் கண்டக்டர் இந்த இடத்தில் இறங்கி கொள்ளுங்கள் என்றார். ஆனாலும் அந்தப் பெண் மீண்டும் எதிர் சீட்டில் உட்கார்ந்து இருந்த இளம் பெண்ணை பார்த்து கடுமையாகஆபாச வார்த்தைகளால் பேசினார். இதனால் பஸ் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆல்பேட்டை சோதனை சாவடி வந்ததும் ரகளை செய்த பெண்ணை கீழே இறங்குமாறு கூறினார். ஆனாலும் அவர் இறங்க மறுத்தார். அப் பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. கண்டக்டர் எவ்வளவோ முயற்சி செய்தும் அந்தப் பெண் இறங்கவில்லை. அந்தப் பஸ்ஸில் இருந்த ஒரு பணியிடம் நீங்களும் போலீஸ் தானே என்னை காப்பாற்றுங்கள் என்றார். அவர் எதுவும் ெசால்ல வில்லை. உடனடியாக ஒரு பயணி சோதனை சாவடியில் இருந்த ஒரு போலீசாரை அழைத்தார். அவரும் வந்தார் .அவரிடமும் அந்தப் பெண் தகராறு செய்தார். இந்த நிலையில் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் அந்த பெண்ணை கீழே இறக்கி விட்டு செல்லுங்கள் என்று கண்டக்டரிடம் கூறினர்.

    இந்த நிலையில் பெண் போலீஸ் ஒருவர் வந்தார் அவரிடமும் அந்த பெண் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரகளையில் ஈடுபட்ட பெண்ணின் குழந்தை அழுது கொண்டே இருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் அந்தப் பெண், பெண் போலீசாரிடம் ரகளையில் ஈடுபட்டார். அப்போது எல்லா பயணிகளும் அந்தப் பெண்ணுக்கு எதிராக புகார் கூறினா ர்கள். ஆனாலும் அந்த பெண் எதுவும் ஏற்றுக் கொ ள்ளா மல் ஏற்றுக்கொ ள்ளாமல் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். திடீரென பெண் போலீஸ் ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அழகாக தூக்கி கீழே இறக்கி விட்டார். மேலும் அந்தப் பெண்ணிடம் வந்த குழந்தையும் இறக்கி விட்டார். அந்த பெண் போதையில் வந்தாரா இல்லை கஞ்சா அடித்து விட்டு வந்தாரா என்பது தெரியவில்லை. இந்த சம்பவத்தால் சுமார் 10 நிமிடம் தாமதமாக அரசு பஸ் புறப்பட்டு சென்றது.

    • வாழ்வந்தான்குப்பம் இருந்து திம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது.
    • பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சிஉளுந்தூர்பேட்டை இருந்து கள்ளக்குறிச்சியில் செல்லும்போது வாழ்வந்தான்குப்பம் இருந்துதிம்மலை ரோட்டுக்கு இடையே பை கிடந்தது இந்த பையினை மழவராயனூரை சேர்ந்த குமார், காட்டு நெமிலியை சேர்ந்த வேல்முருகன் ஆகியோர் எடுத்து வந்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பையில் ரூ. 89,650 மற்றும் கல்வி ஆவணங்கள்,காசோலைபுத்தகம், வங்கி புத்தகங்கள் இருந்தது. பையினை மீட்டு கொடுத்த 2 பேரையும் பல்துறை சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டனர்.

    • கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது.
    • விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் அருகே உள்ள டீ தேவனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன். இவரது மகன் சக்திவேல் (வயது 54). இவர் கடந்த சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் கையில் கத்தியுடன் சுற்றி வந்ததுடன் அக்கம் பக்கம் உள்ள பொதுமக்களையும் மிரட்டி உள்ளதாக தெரிகிறது. இதனைக் கண்ட அதே ஊரைச் சேர்ந்த தே.மு.தி.க. மனம்பூண்டி ஒன்றிய துணைத் தலைவர் வெங்கடேசன் (48) என்பவர் சக்திவேலை மடக்கி பிடிக்க முற்பட்டிருக்கிறார். ஆனால் ஆத்திரமடைந்த சக்திவேல், வெங்கடேசனை கத்தியால் தலையில் வெட்டி இருக்கிறார். இதில் காயம் அடைந்த வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

    உடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி திருக்கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பிரபு பொதுமக்கள் துணையுடன் சக்திவேலை மடக்கி பிடித்தார். அப்போது பிரபுவுக்கும் வலது பக்க கன்னத்தில் காயம் ஏற்பட்டது. ஒரு வழியாக மடக்கி பிடிக்கப்பட்ட சக்திவேலிடம் இருந்து கத்தியை பிடுங்கினர். பின்னர் அரக ண்டநல்லூர் போலீசில் சக்திவேல் ஒப்படைக்கப்பட்டார். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன் விக்கிரவாண்டி தாலுகா குண்டலப்புலியூரில் உள்ள மன வளர்ச்சி குன்றியோர் இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • மதுபோதையில் பள்ளி வேனை ஓட்டிய டிரைவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
    • அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்தவர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகளை நேற்று வகுப்பு முடிந்து ஒரு வேனில் சென்று கொண்டிருந்தனர். கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றதால் அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த வேனை தடுத்து நிறுத்தினர். அப்போது டிரைவர் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் கீரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மது போதையில் வேனை ஓட்டிய டிரைவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர் அறந்தாங்கி மணிவிலான் தெருவை சேர்ந்த அப்துல் ரியாஸ் (வயது 36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, பள்ளி வேன் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×