search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசில்"

    • மணக்குடியை சேர்ந்த மரிய ஜீவா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண்பிள்ளையும், 11 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளனர்.
    • 20 ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பின்னர் 30 ம் தேதி கரை திரும்பி வீட்டிற்கு வரும்போது மனைவி, 2 பிள்ளைகளையும் காணவில்லை.

    கன்னியாகுமரி :

    சேலம் மாவட்டம் சின்னப்பன்பாடி பகுதியை சேர்ந்தவர் கமல் (வயது 36). இவர் கடந்த 2009-ல் குமரி மாவட்டம் மேல மணக்குடியை சேர்ந்த மரிய ஜீவா (33) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 13 வயதில் ஒரு பெண்பிள்ளையும், 11 வயதில் ஆண் பிள்ளையும் உள்ளனர். கடந்த சில நாட்களாக கமல் குளச்சல் அருகே இரும்பிலி பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார்.

    வழக்கம் போல் கமல் கடந்த மாதம் 20 ம் தேதி மீன்பிடிக்க கடலுக்கு சென்றார். பின்னர் 30 ம் தேதி கரை திரும்பி வீட்டிற்கு வரும்போது மனைவி, 2 பிள்ளைகளையும் காணவில்லை. மற்றும் வீட்டிலிருந்த பீரோ, துணிமணிகளையும் காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனே மனைவி, பிள்ளைகளை உறவினர் வீடுகளில் சென்று தேடினார்.ஆனால் அவர்கள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இது குறித்து கமல் குளச்சல் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் மற்றும் அவரது குழந்தைகளையும் தேடி வருகின்றனர்.

    • பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கோபி ராஜாஜி வீதியை சேர்ந்தவர் சவுக்கத்அலி(25). இவரது மனைவி ஷபானா(23). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இருவருக்கும் திருமணமானது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோபி ஜெய்துர்கை நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ஷபானா திடீரென்று மாயமானார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் கோபி போலீசில் கணவர் சவுக்கத்அலி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் மாணவி மாயம்
    • இதனால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 16-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    • கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படிக்கும் மாணவி மாயம்
    • இதனால் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகரை சேர்ந்த ராஜேஸ்வரி மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல் கல்லூரியில் பி.ஏ. இறுதியாண்டு படித்து வந்தார். கடந்த 16-ந்தேதி கல்லூரிக்கு சென்ற இவர் மாலை வீடு திரும்பவில்லை. ராஜேஸ்வரி தனது மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.

    • சேலம் மாவட்ட லலிதாம்பிகை நகைக்கடையில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் போலீசில் புகார் கொடுக்கலாம்.
    • துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு-2 துணை போலீஸ் சூப்பிரண்டு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சேலம் அல்லிக்குட்டை மன்னார்பாளையம் பிரிவு நரசிம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தைராஜ். இவருடைய மனைவி சரஸ்வதி (வயது 42). இவர் சேலம் சின்னகடைவீதியில் உள்ள லலிதாம்பிகை என்ற பெயரில் இயங்கி வந்த நகை கடைக்கு சென்றுள்ளார். அப்போது அவரிடம் நகைக்கு பணம் டெபாசிட் ெசய்தால், செய்கூலி சேதாரம் இல்லாமல் நகை எடுத்துக் கொள்ளலாம் என்றும் அல்லது அதற்கு 3 சதவீதம் வட்டியுடன் பணம் பெற்றுக்கொள்ளலாம், மேலும் பல்வேறு திட்டங்கள் உள்ளது என கடையின் உரிமையாளர்கள் தங்கராஜ் மற்றும் இவரது மனைவி லலிதா ஆகியோர் ஆசை வார்த்தை கூறி உள்ளனர்.

    அதன்பேரில் சரஸ்வதி ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 600 லட்சம் டெபாசிட் செய்ததாகவும், இந்த டெபாசிட் தொகை முதிர்வு அடைந்தும் பணமோ, நகையோ திருப்பி தராமல் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

    இதற்கிடையே சரஸ்வதி கடந்த ஜனவரி மாதம் 25ந் தேதி நகை கடைக்கு சென்று பார்த்தபோது கடை பூட்டுப்போட்டு இருந்தது. இதனால் அவர் அக்கம், பக்கத்தில் விசாரித்தார். அப்போது கடை நிர்வாகத்தினர், பொதுமக்கள் பல பேர்களிடம் பணத்தை பெற்றுக்கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டதாக ெதரிவித்தனர்.

    ஆகவே சரஸ்வதி கொடுத்த புகாரின்பேரில் லலிதாம்பிகை நகைக் கடையின் உரிமையாளர்கள் தங்கராஜ், லலிதா ஆகிய இருவர் மீதும் 120 (பி), 406, 420 ஐ.பி.சி உள்ளிட்ட பிரிவிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    எனவே மேற்படி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட பொதுமக்கள் சம்பந்தப் பட்ட அனைத்து அசல் ஆவணங்கள், மற்றும் அடையாள அட்டை–யுடன் சேலம் ஜாகீர் அம்மாபாளையம் வெண்ணங்கொடி முனியப்பன் கோவில் அருகே அமைந்துள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் கொடுக்கலாம். இவ்வாறு துணை போலீஸ் சூப்பிரண்டு கூறியுள்ளார்.

    • கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி மனைவி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு கணவன் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.
    • மேலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அரச மரம் பஸ் நிறுத்தம் சென்னியப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் சூரியகுமார் (50). லாரி டிரைவர். இவருக்கு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி மனைவி ராஜேஸ்வரி (45), ஒரு மகள் உள்ளார்.

    சூரியகுமாருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படும் நிலையில் கடந்த 7 வருடங்களாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக சரிவர உணவு ஏதும் சாப்பிடாமல் அடிக்கடி மது அருந்தி வந்த சூரியகுமார் சம்பவத்தன்று வீட்டில் இறந்து கிடந்தார். உடனே இறந்து கிடந்த சூரியகுமாரை அவரது உறவினர்கள் அடக்கம் செய்வதற்காக கோபி மின் மயானத்திற்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் உறவினர்களுடன் வந்த ராஜேஸ்வரி தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்திற்கு சூரியகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சென்று புகார் அளித்தார்.

    இதனையடுத்து போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சூரியகுமார் உடலை பிரேதபரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ேமலும் இன்று பிரேத பரிசோதனை நடக்கிறது. அதன் பின்னரே இறப்பு குறித்த சந்தேகம் விலகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    ×