search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப் பொருட்கள்"

    • 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
    • அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் போதைப் பொருட்கள் கடத்தலை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் நாளை (திங்கட் கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பான அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டார்.

    இதன்படி சென்னையில் 9 மாவட்ட செயலாளர்கள் ஒன்று சேர்ந்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் காலை 9.30 மணிக்கு நடத்தப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் ஜெயக்குமார், பால கங்கா, வி.என்.ரவி, ஆதி ராஜாராம், வெங்கடேஷ் பாபு, தி.நகர் சத்யா, ஆர்.எஸ்.ராஜேஷ், அசோக், கே.பி.கந்தன் உள்ளிட்ட 9 மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.

    இதில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்கிறார்கள்.

    இதே போன்று தமிழகம் முழுவதும் உள்ள அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் தங்களது மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். இதையொட்டி சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    • பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள்.
    • வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய ‘நெட்வொர்க்’ அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    செல்போன்கள் மூலமாக இன்று இருந்த இடத்தில் இருந்தே எல்லா வேலைகளையும் செய்துவிட முடிகிறது. அதே நேரத்தில் செல்போன் வழியாக பல்வேறு இழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது.

    செல்போனில் தொடர்பு கொண்டு பேசும் நபர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் இருந்து விதவிதமான வழிகளில் பணத்தை உருவிக் கொண்டிருக்கிறார்கள்.

    உங்களது ஏ.டி.எம். கார்டு செயல் இழந்துவிட்டது. அதனை சரிசெய்ய வேண்டும் என்று பேசி வங்கி கணக்கு விவரங்களை கேட்டு பணத்தை சுருட்டி வந்த மோசடி பேர்வழிகள் நாளுக்கு நாள் புதுப்புது வழிகளில் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை வாரிச் சுருட்டிக் கொண்டே இருக்கிறார்கள். இதுபோன்ற மோசடிக்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து வெளி மாநிலங்களில் இருந்தும் மிகப்பெரிய 'நெட்வொர்க்' அமைத்து மோசடியை அரங்கேற்றி வருகிறார்கள். இதனால் அவர்களை பிடிப்பது என்பது சவாலாகவே இருந்து வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆன்லைன் மோசடி கும்பல் பொதுமக்களின் வங்கி கணக்கில் இருந்து தற்போது புதிதாக நூதன முறையில் பலரை ஏமாற்றி பணத்தை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.

    உங்களது முகவரிக்கு தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பார்சலில் வந்துள்ளது. நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம். போதை பொருள் தடுப்பு பிரிவில் இருந்து பேசுகிறோம் என்று மோசடி ஆசாமி ஒருவன் முதலில் போனில் பேசுகிறார். பின்னர் பேசும் நபர் போலீஸ் அதிகாரி என்று கூறுகிறார்.

    இதனால் எதிர்முனையில் பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அரண்டு விடுகிறார்கள். இதுபோன்று சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் 62 லட்சம் பணத்தை இழந்துள்ளார்.

    தொழில் அதிபரின் செல்போனுக்கு அறிமுகம் இல்லாத புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் மும்பை துணை கமிஷனர் பேசுவதாக கூறியுள்ளார். உங்களது பெயரில் மும்பையில் உங்களது பெயரில் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு கூரியர் மூலமாக பார்சல் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் 5 பாஸ்போர்ட்டுகள் 3 கிரெடிட் கார்டுகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளன என்றும் இதனால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்றும் அந்த நபர் எச்சரித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சென்னை தொழில் அதிபர், நான் சென்னையில் இருக்கிறேன். எனது பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர். எனக்கும், அந்த பார்சலுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார்.

    இருப்பினும் மோசடி ஆசாமி போனில் மிரட்டி, நாங்கள் சொல்லும் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் பயந்து போன சென்னை தொழில் அதிபர் ரூ.62 லட்சத்து 99 ஆயிரம் பணத்தை அனுப்பி உள்ளார்.

    இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டல் விடுத்த மோசடி கும்பல் பின்னர் தொடர்பை துண்டித்துவிட்டது. முன்னதாக தொழில் அதிபர் திரும்ப திரும்ப தொடர்பு கொண்டு பேச முற்பட்டுள்ளார். ஆனால் அதற்கு பயன் கிடைக்கவில்லை.

    இந்த மோசடி தொடர்பாக சென்னை சைபர் கிரைம் போலீஸ் துணை கமிஷனர் கீதாஞ்சலி கூறியதாவது:-

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகள் அதிக சம்பளம் வாங்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கிறார்கள்.

    பார்சலில் கடத்தல் பொருட்கள் இருப்பதால் உங்களுக்கு வாட்ஸ் அப் மூலமாகவே வாரண்டை அனுப்பி கைது செய்ய முடியும் என்று மிரட்டல் விடுக்கிறார்கள். இந்த யோசனைகள் 'ஸ்கைப்' செயலி மூலமாக அரங்கேற்றப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

    இந்த மோசடி பேர்வழிகள் ஆரம்பத்தில் பணத்தை கேட்பது இல்லை. வங்கி கணக்குகள் மற்றும் அதன் உள்ளே நுழையக்கூடிய வழிகளை மிரட்டி கேட்டுப் பெற்று வருகிறார்கள். இதன் பிறகே வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுக்கிறார்கள் அல்லது மிரட்டி பணத்தை பரி மாற்றம் செய்ய சொல்கிறார்கள். தாய்லாந்து மற்றும் ஹாங்காங் பகுதியில் இருந்தே இந்த மோசடிகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற நபர்களிடம் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.

    ஆன்லைன் மூலமாக பணத்தை இழந்துவிட்டால் உடனடியாக சைபர் கிரைம் உதவி எண்ணை 1930-ல் உடனடியாக புகார் செய்தால் அந்த பணம் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதுபோன்ற சைபர் கிரைம் மோசடி பேர்வழிகளிடம் ஏமாறும் பொது மக்கள் www.cybercrime gov.in என்ற முகவரியிலும் புகார் செய்யலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • 250 கிலோ சிக்கியது
    • ராஜஸ்தானை சேர்ந்த 2 பேர் கைது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனுக்கு பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து வேலூர் துணை சூப்பிரண்டு திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் இரவு முழுவதும் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர்.

    அப்போது அதிகாலை 4.30 மணியளவில் பெங்களூரில் இருந்து அதிவேகமாக சொகுசு கார் ஒன்று வந்தது. அதனை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனர்.

    அதில் இருந்தவர்கள் முன்னுக்குபின் முரனாக பதில் கூறினர். சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் சுமார் 250 கிலோ குட்கா போன்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    மேலும் விசரணையில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த

    தினேஷ்(28) மற்றும் திலிப்திவாசி(22) என தெரியவந்தது. பின்னர் 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழிப்புணர்வு கூட்டத்தில் ஊழியர்களுக்கு அறிவுரை
    • போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அரவிந்த் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் முன்னிலை வகித்தார்.

    பள்ளி-கல்லூரிகளில் மாணவர்களிடையே போதை பொருட்கள் தடுப்பது குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்திட, மாண வர்களை கொண்டு போதை பொருள் தடுப்பு குறித்து தொகுதி வாரியாக குழுமம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    பள்ளி,கல்லூரி விடுதி களில் போதை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலருக்கும், மாவட்ட கல்வி அலுவலர்க ளுக்கும் கூட்டத்தில் அறிவு றுத்தப்பட்டது.

    கடலோர காவல் துறை, மீன்வளத்துறை, உதவி இயக்குநர் மற்றும் போதை பொருள் தடுப்பு அலுவலருடன் இணைந்து ஒவ்வொரு வாரமும் கடற்கரை பகுதிகளில் ரோந்து பணி மேற்கொண்டு போதைபொருள்கள் வெளி இடங்களிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசுத் துறையினரும் போதை பொருள் விழிப்புணர்வு மற்றும் அதனை தடுப்பத ற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

    போதை பொருட்கள் பயன்பாடுகள் கண்டறி யப்பட்டால் அது குறித்த தகவல்களை 7010363173 என்ற செல்லிடை பேசி எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மனாப புரம் சப்-கலெக்டர் கவுசிக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீரா சாமி, கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

    • குமாரபாளையம் பகுதி களில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் பள்ளி கள் மற்றும் நகரின் முக்கிய சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
    • ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதி களில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, கூட்டங்கள் பள்ளி கள் மற்றும் நகரின் முக்கிய சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு கட்டமாக குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு போதை பொருட்கள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .

    அப்போது போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி பேசுகையில், போதை பொருட்கள் பயன்படுத்துவோர், விற்போர் குறித்து தகவல் கிடைத்தால் தெரியப்படுத்துங்கள். தகவல் தருபவர்கள் பெயர்கள் பாதுகாக்கப்படும். சட்டம், ஒழுங்கு மீறுவோர் மீது பாரபட்சமின்றி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் இளமுருகன், சிவகுமார், தன்ராஜ், எட்டுகள் ராம்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • போதைப் பொருட்கள் தடுப்பு-ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனை கலை அரங்கத்தில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு மனோகர், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன், சாத்தூர் எம்.எல்.ஏ. ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் போதைப் பொருட்கள் தடுப்பு மற்றும் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    இதைத்தொடர்ந்து போதைப்பொ ருட்கள் ஒழிப்பு உறுதி மொழியினை அமைச்சர்கள் தலைமையில் அனைத்து மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து, மாணவ, மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சப்.கலெக்டர் (சிவகாசி) பிருத்திவிராஜ், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) தெய்வேந்திரன், முன்னாள் அருப்புக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜா, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி ராஜசேகரன், சாத்தூர் ஊராட்சி ஒன்றி யக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பொன்னுத்தம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) காளிமுத்து, அருப்புக்கோ ட்டை வருவாய் கோட்டா ட்சியர் கல்யாணகுமார், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×