search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை பொருள்கள்"

    • விழுப்புரம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் தொடர்ந்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டார்.
    • போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா போன்ற போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொது மக்களின் நலனை பாதிக்கும் இந்த போதை பொருள்களை விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவுறுத்தி இருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மற்றும் விழுப்புரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் நபர்கள் பிடிபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விழுப்புரம் போலீஸ் எஸ்.பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் இதற்கு தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இது ஒரு புறம் இருக்க நீங்கள் எவ்வளவு தான் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினாலும் நாங்கள் செய்வதை செய்து கொண்டே இருப்போம் என்று ஒரு சிலர் தொடர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி விழுப்புரம் டி.எஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் நகரில் சாலை ஓரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் சிறு கடை மற்றும் பெட்டி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்த சோதனை வலுது ரொட்டி சாளமேடு உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து கடைகளிலும் தொடர்ந்தது. இதில் வலுதுரொட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்த பூபாலன் மகன் தேவ் என்பவர் அவரது வீட்டின் முன் வைத்திருந்த பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பது தெரியவந்தது. உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து தேவை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×