search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை நபர்கள் அச்சுறுத்தல்"

    • பெண்கள் வேலைக்கு சென்று இரவு தனியாக வரும்போது அவர்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.
    • போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,

    கோத்தகிரி

    கோத்தகிரி 6-வது வார்டு பகுதியான ரைபிள்ரேஞ்சு எனும் பகுதியில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகி ன்றனர். அவர்களில் பெரும்பா லோனோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்கள் குடியிருக்கும் பகுதியில் அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்த புதரின் மறைவில் இருந்து வந்த காட்டு பன்றி ஒன்று ஒரு பெண்ணை கடித்து குதறியது.

    பலத்த காயம் அடைந்த அவர் கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த முட்புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ரைபிள்ரேஞ்சு குடியிருக்கும் பகுதிக்கு செல்ல 2 தரைப்பாலங்கள் உள்ளது. அவை பராமரிப்பின்றி எப்போது வேண்டுமானாலும் நீரோடையில் அடித்து செல்லும் நிலையில் உள்ளது.

    மேலும் அந்த பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்தின் அருகில் இரவு நேரங்களில் வாலிபர்கள் மதுகுடிப்பது, கஞ்சா பயன்படுத்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களால் ஏதாவது ஆபத்து ஏற்படும் என அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர்.

    சில நேரங்களில் பெண்கள் வேலைக்கு சென்று இரவு தனியாக வரும்போது அவர்களை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். அவர்களிடம் தட்டி கேட்டால் மிரட்டு வதாகவும் தெரிவிக்கி ன்றனர்.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ,

    ×