search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் ஆர்வம்"

    • இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிவப்பு கொய்யா ரக பழங்களை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
    • கிலோரூ .80க்கும், வெள்ளை கொய்யாப்பழம் ரூ. 70க்கும் விற்பனை செய்கின்றனர் .

    உடுமலை:

    உடுமலை பகுதியில் பழனி, ஆயக்குடி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களில் இருந்து கொய்யாப்பழம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. உடுமலை அருகே உள்ள பொன்னாலம்மன் சோலையிலிருந்து இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிவப்பு கொய்யா ரக பழங்களை வாங்க பொதுமக்களிடையே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. பொன்னாலம்மன் சோலை பகுதியில் இருந்து சைக்கிளில் கொண்டு வந்து சிவப்பு கொய்யா பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கிலோரூ .80க்கும், வெள்ளை கொய்யாப்பழம் ரூ. 70க்கும் விற்பனை செய்கின்றனர் .

    சர்க்கரை, ரத்த அழுத்த நோய்களுக்கு கொய்யாப்பழம் சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைப்பதால் கொய்யாப்பழம் வாங்குவதில் பொதுமக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. உடுமலை உழவர் சந்தை பகுதியில் காலை நேரத்தில் சைக்கிளில் கொய்யாப்பழம் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தவிர டவுன் பகுதிகளில் வியாபாரிகள் ஆங்காங்கே சைக்கிளில் வைத்து வெள்ளை மற்றும் சிவப்பு நிற கொய்யா பழங்களை விற்பனை செய்கின்றனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் நடந்த கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடந்தன. ஆண்டுதோறும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட நாட்களை தொடர்ந்து நேற்று உள்ளாட்சி தினத்தை யொட்டி இந்த கூட்டம் நடந்தது.

    சிவகங்கை மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.தமிழக அரசு உத்தரவின்படி. ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கூட்டம் நடந்தது.

    இதில் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்துதல், பருவமழை முன்னெ ச்சரிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி ஊராட்சியில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் எம்.எல்.ஏ. பேசுகையில், கிராமங்களில் உள்ள பெண் குழந்தைகளை உயர்கல்வி படிக்க வைத்து சிறந்த ஆட்சியாளராகவும், ஜெயலலிதா போன்றும் உருவாக்க வேண்டும். ஜெயலலிதா 7 மொழிகள் பேசக் கூடியவர்.

    அவரை போல் பெண் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கொடுக்கப்பட்ட பணிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய கிராம ஊழியர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். இதில் மாவட்ட கவுன்சிலர் கோமதி தேவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி முத்துகுமார் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விட்டனேரி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் கவிஞர் வரதன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விட்டனேரியில் இருந்து செல்லும் அய்யம்பட்டிக்கு மெட்டல் சாலை, சாத்தனி பள்ளி வளாகத்தில் பேவர் பிளாக் சாலை, புதிய அங்கன்வாடி கட்டிடம், உடையவயல் பள்ளியில் சுற்றுவர் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தூய்மை பணியா ளர்களுக்கு ரொக்க பரிசும், மகளிர் குழுக்களுக்கு சால்வையும் அணிவித்து ஊராட்சி மன்ற தலைவர் வரதன் மரியாதை செலுத்தினார். ஊராட்சி செயலாளர் முருகப்பன், தலைமை ஆசிரியர், மகளிர் குழுக்கள், வருவாய் துறை ஒன்றிய அலுவலர், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சியில் கிராம சபை கூட்டம், ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பெண்களும், அரசு பள்ளி மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    கிராம மக்களின் சார்பில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளுக்கு, அதி காரிகளும், ஊராட்சி மன்ற தலைவரும் பதில் அளித்தனர். இதில் பேசிய மாணவர்கள், கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டது புதிய அனுபவமாக அமைந்த தாகவும், மக்களின் தேவை யும், அதிகாரிகளின் பதிலும் அரசின் நடவடிக்கையை தங்களுக்கு வெளிப்படு த்தியதாகவும் தெரிவித்தனர்.

    இதுபோன்று சட்டமன்ற கூட்டத்தையும் பார்வையிட வேண்டும் என்று மாணவர்கள் விருப்பம் தெரிவித்தனர். இதனை ஏற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்வதாக ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து உறுதியளித்தார்.

    மேலும் புதிய ஊராட்சி மன்ற கட்டிடத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.

    வாணியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் புவனேசுவரி சுரேஷ்குமார் தலைமையில் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறை, மருத்துவ பணியாளர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 34-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் 1,341 இடங்களில் நடந்தது.
    • 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவ கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 1,341 இடங்களில் நடந்தது. மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர், தன்னார்வலர்கள், பொதுநல அமைப்பினர் என 2,681 பேர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்த முகாமில் 20 ஆயிரத்து 306 பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.சுகாதாரத்துறையினர் கூறுகையில், முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசியை விட பூஸ்டர் செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது என்றனர்.

    ×