search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்கூட்டம் ரத்து"

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைக்காததால், அவரது பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #Rahul #RahulChopper
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி, வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேர விரயத்தை தவிர்ப்பதற்காக, ஹெலிகாப்டர் மூலம் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.

    அவ்வகையில், மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் 14-ம் தேதி (நாளை) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை அங்குள்ள போலீஸ் கிரவுண்டில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சங்கர் மலாகர் கூறுகையில், “போலீஸ் கிரவுண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி வழங்கும்படி நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், போலீஸ் அனுமதி வழங்கவில்லை. எனவே, பிரசார கூட்டத்தை ரத்து செய்துவிட்டோம்” என்றார்.



    சட்ட விதிகளின் படி, போலீஸ் கிரவுண்டில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், காங்கிரசார் மாற்று இடத்தை தேர்வு செய்து மீண்டும் தங்களை அணுகவில்லை என்றும் சிலிகுரி போலீஸ் கமிஷனர் மீனா தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி இதுவரை மால்டா மற்றும் ராய்கஞ்ச் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். #LokSabhaElections2019 #Rahul #RahulChopper
    பலத்த மழை எச்சரிக்கை காரணமாக திருப்பரங்குன்றத்தில் 7-ந்தேதி நடக்க இருந்த தினகரன் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. #TTVDhinakaran
    மதுரை:

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பணிகளில் அ.தி.மு.க.வுக்கு ஈடு கொடுக்கும் வகையில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழமும் தீவிர பணியாற்றி வருகிறது.

    ஆர்.கே.நகரில் அ.தி.மு.க.வுக்கு அதிர்ச்சி தகவல்கள் கொடுத்தது போல அ.தி.மு.க. கோட்டை என்று கருதப்படும் திருப்பரங்குன்றத்திலும் அதிசயத்தை நடத்திக்காட்ட தினகரன் புதிய வியூகங்களை வகுத்து வருகிறார்.

    இதற்காக வருகிற 7-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடத்த அ.ம.மு.க. முடிவு செய்தது. அதில் துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்குவதாக இருந்தது.

    இதற்காக திருப்பரங்குன்றம் பூங்கா பஸ் நிறுத்தம் அருகே சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸ் அனுமதிக்கு அ.ம.மு.க. நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். ஆனால் போலீசார் அனுமதி தரவில்லை.

    இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனாலும் போலீஸ் அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இதனிடையே 7-ந் தேதி பலத்த மழை பெய்யும் என்று “ரெட் அலர்ட்” விடுக்கப்பட்டுள்ளதால் பொதுக்கூட்டத்தை ரத்து செய்யும்படி கட்சி நிர்வாகிகளுக்கு தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

    இதனால் 7-ந் தேதி திருப்பரங்குன்றத்தில் தினகரன் பங்கேற்பதாக இருந்த பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் மறுதேதியில் கூட்டம் நடத்த அ.ம.மு.க. நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். #TTVDhinakaran
    ×