search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு வழக்கு"

    • ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு.
    • ஜனவரி 16-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.

    அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக இன்று உச்ச நீதிமன்றத்தில் 5வது நாளாக விசாரணை நடைபெற்றது. இதில் இரட்டை தலைமை குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினர்.

    அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர்? என்று கேள்வி எழுப்பினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனரா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை 11ம் தேதி பொதுக்குழு கூட்டம் கட்சியின் விதிப்படி நடைபெற்றது. ஒபிஎஸ் தனக்குத்தான் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது என கூறுவது உண்மை அல்ல.

    ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டாரே தவிர, 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கிய பொதுக்குழுவே, அவற்றை ரத்து செய்துள்ளது என்று அதிமுக கட்சி சார்பில் வாதிடப்பட்டது.

    தொடர்ந்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கிய பொதுக்குழுவே அவற்றை நீக்க முடியும் என்ற வாதம் தவறு.

    கட்சியின் உட்கட்சி பதவிகளுக்கான தேர்தலை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்தே அறிவித்தனர் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    2017-ம் ஆண்டில் அசாதாரண சூழலின்போது பொதுக்குழு கூடி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது.

    பொதுக்குழு கூட்டத்தை கூட்ட அவை தலைவருக்கு அதிகாரம் இல்லை என்பதை மறந்துவிட்டனர். ஜூலை 1ம் தேதி அளிக்கப்பட்டது நோடீஸ் அல்ல என வாதிடப்பட்டது.

    விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். ஜனவரி 16-ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டனர்.

    • 1.5 கோடி உறுப்பினர்கள் தொடங்கி, கிளை, நகரம், வட்டம், மாநகரம் ஆகியவற்றுக்கான கட்சி தேர்தலில் வாக்களிக்கின்றனர்.
    • பொதுக்குழுவின் அதிகாரம் கிளை உறுப்பினரிடம் இருந்து எப்படி கிடைக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தபோது அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி அதே கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் பி.வைரமுத்து ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

    இந்த மனுக்கள் மீதான விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் கடந்த 6ம் தேதி மூன்றாவது நாளாக நடைபெற்றது.

    இதில், தலைமை கழக நிர்வாகிகளுக்கு பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் இல்லை. கட்சியின் தலைவர் அடிப்படை உறுப்பினர்களால் தான் தேர்வு செய்யப்பட வேண்டும் என எம்ஜிஆர் விதிகளை உருவாக்கியுள்ளார். அதை யாராலும் மாற்ற இயலாது.

    இரட்டை தலைமை காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொது குழுவை கூட்ட முடியும் என்று ஓபிஎஸ் தரப்பு வாதம் செய்தது.

    இதையடுத்து, இருதரப்பு வாதங்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணை இன்றைய (ஜனவரி 10ம் ) தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    அதன்படி, இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் அடங்கிய அமர்வு முன்னிலையில் 4வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.

    இன்றைய விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    இதில், 2017ம் ஆண்டு வரை கட்சிக்கு ஒரே தலைமை இருந்தது. அதிமுகவின் பொதுக்குழு, அடிப்படை உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. கட்சியின் விதிகளை திருத்தவும் அதிகாரத்தை கொண்டுள்ளது.

    ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை வேண்டுமென பொதுக்குழு உறுப்பினர்களால் விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

    இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால் கட்சிக்கு மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. பொதுக்குழுவின் முடிவுகளை ஏற்கும் நபரே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என விதி 7 கூறுகிறது. பொதுக்குழுவின் முடிவுகள் அடிப்படை உறுப்பினரை கட்டுப்படுத்தும். பொதுக்குழுவே கட்சியில் உட்சபட்ச அதிகாரம் பெற்றது.

    1.5 கோடி உறுப்பினர்கள் தொடங்கி, கிளை, நகரம், வட்டம், மாநகரம் ஆகியவற்றுக்கான கட்சி தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

    ஒவ்வொரு கிளையும் ஒரு செயலாளரை கொண்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்காலம் காலாவதியானது போல, பொதுக்குழு உறுப்பனர்களின் பதவிக்காலம் காலாவதியாகவில்லை.

    அதிமுக ஜனநாயக கட்சியாக இயங்கி வருகிறது. கட்சிக்கு உயர் அதிகாரம் படைத்த குழு தேவை என்று ஈபிஎஸ் தரப்பு வாதிட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்து வருகின்றனர்.
    • கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

    கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு கடந்த ஆகஸ்டு 25ம் தேதி விசாரித்தது.

    இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 2ம் தேதி அளித்த தீர்ப்பில், பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23ம் தேதிக்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்தது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சென்னை ஐகோர்ட்டின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும்.

    இரு நீதிபதிகள் கடந்த செப்டம்பர் 2ம் தேதி பிறப்பித்த உத்தரவில் அனைத்து அம்சங்களும் ஆராயப்படவில்லை. எனவே இரு நீதிபதிகளின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

    அந்த மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் விசாரணை தொடங்கியது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் விவரங்களை நீதிபதிகள் கேட்டு அறிந்தனர்.

    இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசரத்தை அறிய விரும்புகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

    மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது தானே? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    கட்சியின் ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக யார் யார் இருந்தார்கள் என்ற விவரத்தை நீதிபதிகள் கேட்டறிந்து பதிவு செய்து வருகின்றனர்.

    நீதிமன்ற விசாரணை காரணமாக கட்சிப் பணிகள் தேக்கம் அடைந்துள்ளன என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

    ஓபிஎஸ், ஈபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக 2021, டிசமர்பரில் நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பு கூறப்பட்டது. மேலும், கட்சியின் அனைத்து பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு அதன் விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

    ×