search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக்குகள் மோதல்"

    • மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு‌ அனுப்பி வைத்தனர்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த மின்னூரை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 28). இவர் தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் ஆம்பூர்- பேரணாம்பட்டு சாலையில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பைக்கும், இவர் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் அரவிந்தனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார். அவ்வழியாகச் சென்றவர்கள் அரவிந்தனை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து உமராபாத் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரவிந்தன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    கலசபாக்கம் அடுத்த நாயுடுமங்கலம் அகரம் சிப்பந்தி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவ ருக்கு இன்று (புதன்கிழமை) திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.

    இதற்காக அவரது தாய் மல்லிகா (45), மணமகன் சதீஷ் குமார் இருவரும் திருமண வேலையாக திருவண்ணாமலைக்கு பைக்கில் சென்றனர்.

    அங்கிருந்து நாயுடுமங்கலம் நோக்கி பைக் கில் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வடபுழுதிவூர் கூட்ரோடு அருகே வந்து கொண்டிருந்த போது, பூதமங்கலம் பகுதியைச் சேர்ந்த அயோத்தி என்பவர் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் இருந்து திருவண்ணாமலை நோக்கி பைக்கில் வந்தார்.

    இந்த பைக்குகள் இரண்டும் நேருக்கு நேர் மோதியது. மேலும், அவ்வழியே துரைமுருகன் என்பவர் ஓட்டிவந்த பைக்கும் நிலை தடுமாறி இவர்கள் மீது மோதியது. இதில் 3 பைக்குகளும் ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டது.

    இதில், சதிஷ்குமாரின் தாய் மல்லிகாவுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் பட்டார்.

    ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இந்த விபத்தில் ராஜேஷ்குமார், துரைமுருகன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து திருவண்ணா மலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    விபத்தில் மல்லிகா இறந்ததால் சதீஷ்குமாரின் திருமணம் நின்றுபோனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 3 பேர் படுகாயம்
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலி கோட்டை பகுதியை சேர்ந்தவர் முஜித்முல்லா இவரது மகன் மன்சூர் (வயது 20) மற்றும் சோமாலபுரத்தை சேர்ந்த அவரது நண்பர் சுஜாய் (20). ஆகிய இருவரும் நேற்று ஒரே பைக்கிள் ஏலகிரி மலைக்கு நேற்று சுற்றுலா வந்தனர்.

    அதன் பின்னர் சுற்றுலா முடிந்து நண்பர்கள் வீடு திரும்பினார். அப்போது ஏலகிரி மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 13 வது கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது, முன்னாள் சென்ற பைக்கை முந்தி செல்ல முயன்றனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக முன்னாள் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 3 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரிமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கோதண்டன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×