search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி"

    • தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையுள்ளது.
    • முன்னெச்சரிக்கை பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகளை அரூர் பெரிய ஏரியில் பேரிடர் மீட்புக் குழுவினர் மேற்கொண்டனர்.

    அரூர்,

    அரூரில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை பயிற்சி நடைபெற்றது. தருமபுரி மாவட்ட பேரிடர் மேலாண்மை அலுவலகம் சார்பில் நடைபெற்ற இந்த பயிற்சியை அரூர் கோட்டாட்சியர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த வரும் மழையினால் நீர்த்தேக்கங்கள், தடுப்பணைகள், ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

    மேலும் ஓரிரு மாதங்களில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையுள்ளது. இந்த நிலையில், பருவ மழைக்காலங்களில் ஏற்படும் பேரிடர் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காப்பாற்றுதல், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகளை அரூர் பெரிய ஏரியில் பேரிடர் மீட்புக் குழுவினர் மேற்கொண்டனர்.

    இதில் வட்டாட்சியர் கனி மொழி, தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ரகுபதி, தன்னார்வலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    ×