search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெலாக்வா"

    ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியின்போது அமெரிக்காவில் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு நாசமானதாக வெளியான தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வோம்.
    ஹைட்ரோகார்பன் எரிவாயு பாதிப்பு பற்றி பல்வேறு விவரங்கள் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அந்த வரிசையில் அமெரிக்காவில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சியில் சுமார் 6,75,000 ஏக்கர் நிலப்பரப்பு முற்றிலும் நாசமாகி, மக்கள் வாழ முடியாத பகுதியானது என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

    அவ்வாறு பரவிய தகவலில் அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் அருகில் உள்ள பெலாக்வா என்னும் பகுதியின்  பெரும்பாலான நிலப்பரப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக சில ஆண்டுகளுக்கு முன் ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், இதனை உண்மை போன்று சித்தரிக்கும் பெயர் பலகையின் புகைப்படமும் சமூக வலைத்தள வாசிகளால் அதிகம் பகிரப்படுகிறது.



    உண்மையில் அமெரிக்காவில் பெலாக்வா என்ற பெயர் கொண்ட நகரம் எதுவும் இல்லை என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று உறுதிப்படுத்தி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான பெயர் பலகை கொண்ட புகைப்படம் நௌம் மக்னுசன் என்பவரால் வரையப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.

    ஹைட்ரோகார்பன் பாதிப்பால் பல லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு மனிதர்கள் வாழ தகுதியற்றதாக சித்தரிக்கும் மீம் சமூக வலைதளவாசிகளை இத்தனை நாட்களாக ஏமாற்றியிருப்பதை ஆய்வு நிறுவனம் அம்பலப்படுத்தி இருக்கிறது.
    ×