search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் விரதம்"

    சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பெண்களை அனுமதிக்கும்போது அவர்கள் விரத முறைகளை கடைபிடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #Sabarimala #SCVerdict
    நாகர்கோவில்:

    சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மாலை அணிந்து 41 நாட்கள் விரதம் இருந்தே சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பெண்களுக்கும் அனுமதி உண்டு என சுப்ரீம்கோர்ட்டு நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அவ்வாறு பெண்களை அனுமதிக்கும்போது அவர்கள் விரத முறைகளை கடைபிடிக்க வாய்ப்புள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து ஆண்டுதோறும் சபரிமலை சென்று வரும் இரணியலைச் சேர்ந்த குருசாமி கோபி கூறியதாவது:-

    நான் 35 வருடங்களாக சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வருகிறேன். நித்ய பிரமச்சாரியான அய்யப்பனை தரிசிக்க வேண்டும் என்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உள்ளன. அய்யப்பனை வேண்டி மாலை அணியும் பக்தர்கள் ஒரு மண்டலம் அதாவது 41 நாட்கள் கடும் விரதம் இருக்க வேண்டும். காலை, மாலை என இருவேளை கண்டிப்பாக குளிக்க வேண்டும். மதியம் மட்டுமே சாப்பிட வேண்டும். இரவில் தூங்கும்போது தலையணை வைத்து படுக்க கூடாது என்பது போன்ற பல விதிமுறைகள் உள்ளன.

    சபரிமலையில் 18-ம் படி ஏற வேண்டும் என்றால் கண்டிப்பாக கழுத்தில் மாலை அணிந்திருக்க வேண்டும். தலையில் இருமுடி கட்டியிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கு நிற்கும் போலீசாரே அவர்களை தடுத்தி நிறுத்தி 18-ம் படி ஏற அனுமதிக்க மாட்டார்கள். மாலை அணியாமல் வரும் பக்தர்கள் வடக்கு பாதை வழியாகச் சென்று அய்யப்பனை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இப்போது 5 நாட்கள், 10 நாட்கள் என்று கூட பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி செல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு படி பெண்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டால் மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சினைகளால் அவர்களால் 41 நாட்கள் விரதம் இருக்க முடியாது. ஏற்கனவே ஆண்கள் 5 நாட்கள், 10 நாட்கள் விரதம் இருந்து சபரிமலை செல்வது போல் பெண்களும் விரதம் இருந்து சென்று தரிசிக்கலாம்.

    ஏற்கனவே அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். பெண்கள் கூட்டமும் சேரும்பட்சத்தில் சாமி தரிசனம் செய்ய கடும் சிரமங்கள் ஏற்படும். மேலும் கோவிலின் மகிமையும் குறைந்து சுற்றுலாதலம் போல் மாறி விட வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் வடசேரியைச் சேர்ந்த குருசாமி மணி கூறியதாவது:-

    நான் 55 வருடமாக விரதமுறைகளை கடைபிடித்து சபரிமலைக்கு சென்று வருகிறேன். ஊர்ப்புறங்களில் இருக்கும் அய்யப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வருகிறார்கள், ஏன் சபரிமலைக்கு மட்டும் செல்ல அனுமதி இல்லை என கேட்கிறார்கள்.

    ஊர்ப்புற கோவில்களில் உள்ள அய்யப்பன் சிலை, மக்களாக சேர்ந்து பிரதிஷ்டை செய்தது. ஆனால் சபரிமலையில் மட்டும் அய்யப்பன் தானாகவே வந்து அமர்ந்ததாக ஐதீகம் உள்ளது. அங்கு அய்யப்பன் யோக நிலையில் சன்னியாசி கோலத்தில் இருக்கிறார். அவரை தரிசிக்க செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக விரதமுறைகளை கடைபிடித்தே ஆக வேண்டும். அவ்வாறு விரதமுறைகளை கடைபிடிக்காமல் சபரிமலை சென்றால் கண்டிப்பாக சுவாமியின் கோபத்தையும், சில கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் சபரிமலையில் உள்ள அய்யப்பன் ஒரு பெண்ணால் பிறக்கவில்லை. அவர் ஹரி, ஹரனுக்கும் ஒளியாக பிறந்தவர். அதனால் தான் மாதவிடாய் உள்ள பெண்கள் அங்கு செல்லக்கூடாது என சொல்லப்படுகிறது.

    ஆனால் தற்போது சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு அளித்த வருத்தமளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Sabarimala #SCVerdict

    ×