search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் அனுமதி"

    தேர்தல் தோல்வியால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவில் மாற்றம் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறினார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது.

    கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி பெற்றது. ஏனைய 19 தொகுதிகளையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கைப்பற்றியது.



    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தோல்விக்கு சபரிமலை பிரச்சினையே முக்கிய காரணம் என்று கூறப்பட்டது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு தீவிரமாக அமல்படுத்தியது.

    இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர். இந்த போராட்டத்தின் வெளிப்பாடுதான் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்விக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் கேரள சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும், சபரிமலை பிரச்சினை குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு பெண்களுக்கான உரிமையை பெற்று தருவதில் ஒருபோதும் பின்வாங்காது. நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வெற்றி வாய்ப்பை இழந்ததால் சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் முடிவை வாபஸ் பெறப் போவதில்லை. அரசு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்பது அரசின் முடிவல்ல. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவு. அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. அந்த கடமையைதான் கேரள அரசு செய்தது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்றாவிட்டால் கோர்ட்டை அவமதித்த வழக்கை சந்திக்க நேரிடும்.

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தோல்வியை சந்தித்ததை சிலர் கொண்டாடுகிறார்கள். அவர்கள் இப்போது வேண்டுமானால் சிரிக்கலாம். அந்த சிரிப்பு தற்காலிகமானதே. விரைவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மீண்டு எழும்.

    பெண்களுக்காகவும், மக்களுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொடர்ந்து பாடுபடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம் என்று ஐகோர்ட்டில் கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது. #SabarimalaTemple #KeralaGovernment
    கொச்சி:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரி, 4 இளம்பெண்கள் கேரள ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். ரேஷ்மா நிஷாந்த், ஷனிலா சஜீஷ், தான்யா, எம்.சூர்யா என்ற அந்த 4 பேரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.



    அவர்கள் தங்கள் மனுவில், “நாங்கள் தீவிர ஐயப்ப பக்தர்கள். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நாங்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து வருகிறோம். ஆனால், அரசியல் கட்சியினரின் எதிர்ப்பால், நாங்கள் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. எனவே, அனைத்து வயது பெண்களும் வழிபட வசதியாக பிரத்யேகமாக 2 அல்லது 3 நாள் ஒதுக்கலாம். அவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அளிக்க வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

    இந்த மனு, தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட 2 நாள் ஒதுக்கலாம்” என்று கேரள அரசு தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.  #SabarimalaTemple #KeralaGovernment
     
    சபரிமலையில் வழிபாட்டு முறைக்கு மாறாக சென்ற பெண்களை கேரள அரசு ராஜமரியாதையோடு அழைத்துச்சென்றது ஏன்? என்று ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Sabarimala #TamilMaanilaCongress
    சென்னை:

    த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கேரள முதல்-அமைச்சர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை என்று பேசி இருக்கிறார். சபரிமலைக்கு பெண்கள் போவதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்ததே தவிர கோவில் வழிபாட்டு முறைகளுக்கு மாறாக போகலாம் என்று சொல்லவில்லை.

    மத வழக்கங்களில் வழிபாட்டில் இதில் சம்பந்தமில்லாத நபர்கள் பொது நல வழக்கு போடுவது ஏற்புடையதல்ல என்பதை ஏற்க மறுத்துள்ளார்கள். மறு ஆய்வில் இவைகளெல்லாம் கருத்தில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

    சபரிமலை என்பது சுற்றுலா தளம் அல்ல? கடவுள் நம்பிக்கை உள்ள ஐயப்பன் பக்தர்கள் போகிற இடம். முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதியாமல் கேரள அரசு சட்டத்தின் மூலம் மாற்ற முனைந்தது. ஆனால் வழிபாட்டு முறைகளை மீறி சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லாதபோது இரண்டு பெண்களை ராஜமரியாதையோடு அழைத்து சென்றது ஏன்?

    இவ்வாறு ஞானதேசிகன் கூறி உள்ளார். #Sabarimala #TamilMaanilaCongress
    சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி வழங்கியதையடுத்து சபரிமலைக்கு செல்வதற்கு பதிலாக சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக சீர்காழி அய்யப்ப பக்தர்கள் கூறியுள்ளனர்.
    சீர்காழி:

    சீர்காழியை சேர்ந்த சபரிகிரி அய்யப்பா சேவா சங்கத்தின் தலைவரும்,43ஆண்டுகளாக சபரிமலை யாத்திரை செல்லும் ஐயப்ப குருசாமியுமான அமர்நாத்சுவாமிகள் கூறியதாவது:-

    சீர்காழியிலிருந்து கடந்த 43ஆண்டுகளாக 120பேர் கொண்ட பக்தர்கள் சபரிமலையாத்திரைசென்று அய்யப்பனை தரிசனம் செய்துவருகிறோம்.எங்களது குழுவில் உள்ள அனைத்து அய்யப்ப பக்தர்களும் 48நாட்கள் முறையாக விரதம் இருந்து சபரிமலை செல்கிறோம். ஆனால் அண்மையில் உச்சநீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.

    இது சபரிமலையில் காலம், காலமான நம்பிக்கைக்கு எதிராக உள்ளது. பெண்கள் 48நாட்கள் விரதம் இருந்து சபரிமலை கோயிலுக்கு சென்று வழிபட இயலாது. இந்த தீர்ப்பினால் அய்யப்ப பக்தர்கள் மனவருத்தம் அடைந்துள்ளோம். ஆகையால் இந்த ஆண்டு முதல் சபரிமலைக்கு செல்வதற்கு பதிலாக சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு செல்ல முடிவெடுத்துள்ளோம். எங்களது குழுவில் உள்ள 120 அய்யப்ப பக்தர்கள், வரும் கார்த்திகை மாதம் விரதம் மேற்கொண்டு சென்னையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு சென்று அங்கு நெய் அபிஷேகம் செய்து விரதத்தை முடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் அண்டை மாநிலமான தமிழகத்திலும் போராட்டம் நடந்து வருகிறது. #Sabarimala
    சென்னை:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் வெடித்த போராட்டம் அண்டை மாநிலமான தமிழகத்திலும் பரவியது.

    குமரி மாவட்டம் களியக்காவிளை முதல் சென்னைவரை பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடைபெற்றது. சென்னை கோடம்பாக்கத்தில் அய்யப்ப பக்தர்கள், பெண்கள் பேரணியாகச் சென்றனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியறுத்தினர்.

    நெல்லை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டம் நடந்தது.

    கோவை மேட்டுப்பாளையத்தில் அனைத்து அய்யப்ப பக்தர்கள் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்பகுதியில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் இருந்து அய்யப்ப பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது சரண கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் குத்து விளக்கு ஏற்றி அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அய்யப்ப பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    துடியலூர் பஸ் நிறுத்தம் அருகே இந்து மத பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. என்.ஜி.ஓ காலனியில் உள்ள அய்யப்பன் கோவிலில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அய்யப்பன் படத்தை ஏந்திய படி 2 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக வந்தனர். இதில் அய்யப்பா சேவா சங்கம், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

    கோவையில் அடுத்த கட்டமாக ஒரு லட்சம் பேரை திரட்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் வட்டார அய்யப்ப பக்தர்கள் சங்கம் அகில பாரத அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை சார்பில் இணைந்து கூட்டம் நடத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சபரி மலையில் ஆச்சார வழிபாட்டு முறையே சிறந்தது. அதை பின்பற்ற வேண்டும். 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மாலை இடுவதில்லை. இருமுடி கட்டுவதில்லை. சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகள் யாரும் தலையிடக்கூடாது என்று வலிறுத்தப்பட்டது. முன்னோர்கள் பெண்களை சபரிமலைக்கு அனுமதிக்காத தற்கு காரணங்கள் உள்ளன. இந்த விதிகளை மீறி பெண்களை சபரிமலைக்கு செல்ல அனுமதிக்ககூடாது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அய்யப்பன் கோவிலில் அகில இந்திய அய்யப்ப சேவா சங்கம் சார்பில் கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும், 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு இருமுடி கட்ட மாட்டோம். பெண்களை சபரிமலைக்கு அழைத்து செல்லமாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

    திருச்சி மேலசிந்தாமணி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அய்யப்ப பக்தர்கள் கூட்டு பஜனை செய்தனர். இதில் திருச்சி மாநகர் பகுதியில் உள்ள அய்யப்ப குருசாமிகள், அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அய்யப்ப பாடல்களை பாடி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

    ராஜபாளையம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள அய்யப்பன் சன்னிதானத்தில் நடை பெற்ற கூட்டு பிரார்த்தனை யில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நீதி மன்ற தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டுமென கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கேரளா மற்றும் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவது போல டெல்லியில் அய்யப்ப பக்தர் போராட்டத்தில் ஈடுபட்டனர். #Sabarimala
    சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபாடு செய்ய அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதியளித்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் நிராகரித்தனர். #PinarayiVijayan
    திருவனந்தபுரம்:

    10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் இது தொடர்பான பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு கூறியது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்போவதாக ஐயப்பன் கோயிலுக்கு ஆபரணங்களை அளித்துவரும் பந்தளம் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.



    எனவே, இதுதொடர்பாக நாளை (திங்கட்கிழமை) ஆலோசிக்கவும் சுமுகமான ஒரு முடிவை ஏற்படுத்தவும் பந்தளம் அரண்மனை பிரதிநிதிகள் மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் பூசாரிகளுக்கு கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அழைப்பு விடுத்திருந்தார்.

    அவரது அழைப்பை பந்தளம் அரண்மனை பிரதிநிதிகளும்,  ஐயப்பன் கோயில் பூசாரிகளும் இன்று நிராகரித்துள்ளனர்.
    #SabarimalaTempleverdict #PandalamPalaceRepresentatives #PinarayiVijayan
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார். #Sabarimala #SabrimalaVerdict
    புதுடெல்லி:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.

    இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது” என குறிப்பிட்டார்.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் தீர்ப்பில் ஒரே கருத்தை கொண்டிருந்தனர். நீதிபதிகள் சந்திரசூட், நாரிமன் ஆகியோர் சில கருத்துகளில் முரன்பட்டாலும் இறுதி முடிவு ஒன்றாக இருந்த காரணத்தால், தலைமை நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர். 

    நீதிபதி இந்து மல்ஹோத்ரா தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:-

    மத ரீதியாக உள்ள நம்பிக்கைகளை சாதாரனமாக எடுத்துக்கொள்ள கூடாது, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும். சம உரிமை என்பதுடன் மத ரீதியான பழக்கங்களை தொடர்பு படுத்த கூடாது. மதரீதியான பழக்கங்கள் பற்றி நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது. வழிபாடு நடத்துபவர்கள் முடிவு செய்ய வேண்டும். 

    என அவர் கூறியிருந்தார். 
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், மறு ஆய்வு மனு தாக்கல் செய்வோம் என தேவசம் போர்டு தலைவர் கூறியுள்ளர். #Sabarimala #SabrimalaVerdict
    புதுடெல்லி:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.

    கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்பட்டது.

    தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல. இந்த தடை இந்து பெண்களின் உரிமைக்கு எதிரானது” என குறிப்பிட்டார்.

    தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி கன்வில்கர் தீர்ப்பில் ஒரே கருத்தை கொண்டிருந்தனர். நீதிபதிகள் சந்திரசூட், நாரிமன் ஆகியோர் சில கருத்துகளில் முரன்பட்டாலும் இறுதி முடிவு ஒன்றாக இருந்த காரணத்தால், தலைமை நீதிபதியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர். நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

    இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர். 

    சுப்ரீம் கோர்ட் வழங்கிய இந்த தீர்ப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. எனினும், அக்டோபர் 16-ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்படும். அப்போது, பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    தீர்ப்பு குறித்து சபரிமலை கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் பத்ம குமார் கருத்து தெரிவிக்கையில், “சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறு பரிசீலனை மனு தாக்கல் செய்வோம்” என தெரிவித்துள்ளார்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. #Sabarimala #SupremeCourt
    புதுடெல்லி:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய விசாரித்து வந்தது.

    கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்பட்டது.

    இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது, தலைமை நீதிபதி உள்ளிட்ட 4 நீதிபதிகள் ஒத்த கருத்தையும், நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார். 

    தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், “நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல” என குறிப்பிட்டார்.

    இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர். 
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது. #Sabarimala #SupremeCourt
    புதுடெல்லி:

    கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பல வழக்குகள் ஒன்றாக விசாரிக்கப்பட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப் நாரிமன், கன்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. 

    கேரள மாநில அரசு, தேவஸ்தான போர்டு, மத்திய அரசு, மத அமைப்புகள் இந்த வழக்கில் தனித்தனியாக பிரமானப்பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளன. ஒரு மாநிலத்தின் பாரம்பரியம், மதரீதியான நம்பிக்கைகள் போன்றவற்றோடு அரசமைப்பு சட்டப்படி ஒரு பெண்ணின் உரிமையை தீர்மானிக்கும் இந்த வழக்கு மிகவும் சவாலானதாக கருதப்படுகிறது.


    தீர்ப்பு வழங்க இருக்கும் தலைமை நீதிபதி அமர்வு

    மதரீதியிலான செயல்பாடுகளுக்கு உரிமை அளிக்கும் அரசமைப்பு சட்டப்பிரிவு 25-ன் கீழ் சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கை அணுகுமா? அல்லது பாலின அடிப்படையிலான பாகுபாட்டை தடை செய்யும் அரசமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் 15-ன் கீழ் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் அணுகுமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மேலும், குறிப்பிட்ட வயதுடைய பெண்களுக்கு மட்டும் தடை விதிப்பதென்பது தீண்டாமைக்கு வழிவகுப்பதாக குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கோவில் பக்தர்கள் தங்களது பாரம்பரியத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு சட்டப்பிரிவு 26-ன் படி உரிமை உள்ளதா என்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு அளிக்கிறது. 
    ×