search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் நகை கொள்ளை"

    கோயம்பேட்டில் மாநகர பஸ்சில் பெண்ணிடம் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    போரூர்:

    ஆவடி பகுதியைச் சேர்ந்தவர் சோனாச்சலம். இவரது மனைவி தங்க புஷ்பம். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களுரில் உள்ள மகன் வீட்டிற்கு சென்று விட்டு நேற்று சென்னை திரும்பினார்.

    பின்னர் அவர் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து ஆவடி செல்லும் மாநகர பஸ்சில் (எண்.77) அமர்ந்தார். பஸ் புறப்பட்டு சிறிது தூரம் சென்றதும் தங்கபுஷ்பம் தனது கைப்பையை பார்த்த போது, அது கிழிந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் 13 பவுன் நகை இருந்தது.

    மர்ம நபர்கள் பையை பிளேடால் கிழித்து நகையை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து கோயம்பேடு பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குரோம்பேட்டையில் பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை நியூ காலனி, 12-வது தெருவில் உள்ள குடியிருப்பில் முதல் மாடியில் வசித்து வருபவர் பிருந்தா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் பணி முடிந்து வீட்டுக்கு வந்தார். அவர் வீட்டில் தனியாக இருந்தார்.

    இந்த நிலையில் மர்ம வாலிபர் வீட்டின் கதவை தட்டினான். பிருந்தா கதவை திறந்ததும் அவன் கத்தியை காட்டி மிரட்டி உள்ளே புகுந்தான். பின்னர் பிருந்தாவை கட்டிபோட்டு வாயில் துணியை திணித்தான்.

    மேலும் பிருந்தா அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டான்.

    சிறிது நேரம் கழித்து சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பிருந்தாவை மீட்டனர்.

    இதுகுறித்து குரோம்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்கள்.

    கோயம்பேடு பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
    போரூர்:

    ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் தனது சகோதரருடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் மதியம் சித்தூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.

    பஸ்சில் ஏறி தன்னிடம் இருந்த பையை இருக்கைக்கு மேல் வைத்துவிட்டு அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து பஸ் கிளம்பியபோது பையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த பையில் 11 பவுன் நகை இருந்தது. அதை மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #JewelRobbery

    பரமக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகைகளை மர்ம மனிதன் கொள்ளையடித்து சென்றான்.

    பரமக்குடி:

    பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியத்துக்குட்பட்ட அ.காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராசு, விவசாயி. இவருடைய மனைவி பூமயில் (வயது 42).

    கணவன்-மனைவி இருவரும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கினர். நள்ளிரவில் யாரோ மர்ம மனிதன் அவர்களது வீட்டின் மேற்கூரையை பிரித்து வீட்டுக்குள் புகுந்தான்.

    அவன், பூமயில் கழுத்தில் அணிந்திருந்த 3 தங்க சங்கிலிகளை பறித்தான். அப்போது கண் விழித்த பூமயில் கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் மர்ம மனிதன் பூமயில் கழுத்தில் கிடந்த 3 தங்க சங்கிலிகளையும் பறித்துக்கொண்டு ஓடினான். அவனை ராசுதுரத்தி சென்றார். அதற்கு பலன் இல்லை.

    இதுகுறித்து நயினார் கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. 15 பவுன் நகைகள் கொள்ளை போனதாக புகாரில் கூறப்பட்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×