search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெட்ரோலியம் பொருட்கள்"

    பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர இப்போதைக்கு வாய்ப்பில்லை என ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி தெரிவித்துள்ளார். #PetrolPriceHike #GST #SushilKumarModi
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவது பொதுமக்களிடையே மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேபோல், பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

    இது தொடர்பாக பேசிய ஜி.எஸ்.டி. கவுன்சில் உறுப்பினர் சுஷில்குமார் மோடி, பெட்ரோலியப் பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டதாக தாம் கருதவில்லை என்றும், இப்போதைக்கு அதற்கு வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.



    மேலும், பெட்ரோலியப் பொருட்கள் மூலம் மாநில அரசுகளுக்கு அதிக அளவில் வருவாய் கிடைப்பதாகவும், ஒரு வேளை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரப்பட்டாலும், அதற்கு மேல் கூடுதல் வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருப்பதால், ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்துவிட்டால் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைந்து விடும் என்று கூற முடியாது எனவும் சுஷில்குமார் மோடி கூறியுள்ளார். #PetrolPriceHike #GST #SushilKumarModi
    ×