search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூச்சூட்டுதல்"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே வெங்கரையில் பழமைவாய்ந்த வெங்கரையம்மன் கோவிலில் பூச்சூட்டுதல் நிகழ்ச்சி தொடங்கியது
    • பேச்சு வார்த்தைக்கு 7 பேர் கொண்ட கமிட்டி அமைப்பு

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே வெங்கரையில் பழமைவாய்ந்த வெங்கரை யம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் திருவிழாவிற்கான ஏற்பாடு களை வெங்கரையம்மன் கோவில் திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வந்தனர். இதற்கிடையே திருவிழா நடத்துவதில் இரு பிரிவினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து தாசில்தார் சிவகுமார் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.ஆனால் இதில் சமரச உடன்பாடு ஏற்படவில்லை. இந்நிலையில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடக்க இருந்தது. பிரச்சினை காரணமாக காப்பு கட்டும் விழா இந்து சமயஅறநிலையத் துறையினரால் ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

    அந்த நோட்டீசில் திருவிழா தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. இதனால் தற்போது திருவிழா நடந்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும். எனவே இந்த ஆண்டு தற்காலிகமாக திருவிழா நடத்தப்படுவது ஒத்திவைக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காகவும் நேற்று இரு தரப்பினரையும் திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து வெங்கரை பகுதியைச் சேர்ந்த 3 நபர்களும், பூசாரிபாளையம் பகுதியைச் சேர்ந்த 3 நபர்களும், மத்தியஸ்தராக ஒரு நபரும் மொத்தம் 7 பேர் கொண்ட கமிட்டியை நியமித்து திருவிழா நடத்த திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இன்று அதிகாலை வெங்கரை அம்மன் கோவில் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இருப்பினும் வெங்கரை பகுதியில் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.இதனால் பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×