search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூங்காவை"

    • ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.
    • ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் அணையையொட்டி பூங்கா அமைந்துள்ளது. நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் குடும்பத்துடன் பவானிசாகர் அணை பூங்காவுக்கு வந்தனர்.

    சிறுவர்கள் ஊஞ்சல் விளையாடியும், சறுக்கு விைளயாடியும் மகிழ்ந்தனர். மேலும் பவானிசாகர் அணை மீனை சுடச்சுட ரசித்து சாப்பிட்டனர். பவானிசாகர் அணை பூங்காவுக்கு நுழைவு கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படுகிறது.

    இதேபோல் இருசக்கர வாகனத்துக்கு ரூ.10-ம், காருக்கு ரூ.30-ம், பஸ், வேன்களுக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஆடிப்பெருக்கை யொட்டி நேற்று ஒேர நாளில் 19,800 பேர் பவானிசாகர் அணை பூங்காவை கண்டு ரசித்தனர். இதன் மூலம் கட்டணமாக ரூ.1 லட்சத்து 22 ஆயிரம் வசூல் ஆனது.

    மேட்டூர் அணை பூங்காவை நேற்று விடுமுறை நாள் என்பதால் ஒரே நாளில் 12 ஆயிரத்து 600 பேர் பார்வையிட்டனர்.

    சேலம்:

    மேட்டூர் அணை பூங்காவுக்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள் . நேற்று விடுமுறை நாள் என்பதால் காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். இதனால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக காட்சி அளித்தது.

    மேட்டூர் அணையை பார்வையிட்டவர்கள் காவிரியில் நீராடி அணைக்கட்டு முனியப் பனை தரிசித்தனர். பின்னர் ஆடு, கோழி பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். குடும்பத்துடன் அனைவரும் பூங்காவிற்கு வந்து உண்டு மகிழ்ந்தனர்.

    கடைகளில் மீன்களை வாங்கி சமைத்து சாப்பிட்டனர். சுற்றுலா பயணிகள் வருகையால் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனை அதிகரித்தது. வண்ணமீன் காட்சி சாலை, பாம்பு பண்ணை, மீன் பண்ணை, மான் பண்ணை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். சிறியவர்கள் உடன் பெரியவர்களும் ஊஞ்சல் ஆடி விளையாடி மகிழ்ந்தனர்.

    நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 12,598 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர் .இதன்மூலம் நுழைவு கட்டணமாக 62 ஆயிரத்து 990 வசூலானது.மேட்டூர் அணையின் வலது கரையில் உள்ள பவளவிழா கோபுரத்திற்கு 1237 சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.இதன் மூலம் 6 ஆயிரத்து 185 பார்வையாளர் கட்டணமாக வசூலிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×