search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூக்களின் விலை கடும் வீழ்ச்சி"

    • திண்டுக்கல் பூ மார்க்கெடடில் வரத்து அதிகரிப்பு மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தினால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் வரத்து அதிகரிப்பு மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தினால் பூக்களின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.1400க்கு விற்பனையான மல்லிகைப் பூ தற்போது ரூ.250க்கு விற்பனை ஆவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது அண்ணா வணிக வளாகம். இங்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தாடிக்கொம்பு, ரெட்டியார்சத்திரம், ஆத்தூர், நரசிங்கபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.


    திண்டுக்கல் பூ சந்தையில் இருந்து திருப்பூர், கோவை, திருச்சி, கரூர், சேலம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களுக்கும் பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் கடந்த வாரம் தொடர் முகூர்த்தம் காரணமாக இங்கு மல்லிகை பூ கிலோ ரூ.1400க்கும், முல்லை ரூ.600க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும், சம்மங்கி ரூ.200க்கும் விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இந்த வாரம் வரத்து அதிகரிப்பு மற்றும் முக்கிய விசேஷங்கள் இல்லாத காரணத்தால் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரத்தை விட 5 மடங்கு விலை வீழ்ச்சியடைந்து மல்லிகை ரூ.250, முல்லை ரூ.120, கனகாம்பரம் ரூ.150, சம்பங்கி ரூ.20, செண்டுமல்லி ரூ.15 என்ற விலையில் விற்பனையாகிறது. இதனால் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    ×