search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலந்த்சாகர் வன்முறை"

    உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் புலந்த்சாகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட ராணுவ வீரர் கைதானார். #BulandshahrViolence #ArmymanArrested
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் கடந்த வாரம் பசுக்கள் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து, அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தி கூட்டத்தை போலீசார் கலைத்தனர்.
     
    இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர்மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்தது. இதுதவிர 20 வயது மதிக்கத்தக்க வாலிபரும் பலியானார்.



    இந்த வன்முறை தொடர்பாக சிறப்பு படை போலீசார் 9 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வன்முறை கும்பலில் ஒருவராக காணப்பட்ட ராணுவ வீரர் ஜித்தேந்திரா மாலிக் என்பவரை போலீசார் தேடி வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உடலில் பாய்ந்த தோட்டா இவரது துப்பாக்கியில் இருந்து பாய்ந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    இந்நிலையில், ஜித்தேந்திரா மாலிக்கை மீரட் நகரில் சிறப்பு விசாரணை குழு போலீசாரிடம் ராணுவ உயரதிகாரிகள் நேற்று ஒப்படைத்தனர். அவரை புலந்த்சாகர் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் இன்று ஆஜர்படுத்தவுள்ளனர்.

    இதற்கிடையில், புலந்த்சாகர் புறநகர் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்ட் ராயீஸ் அக்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். அவரது பதவியில் மணிஷ் மிஷ்ரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த வன்முறையில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் பஜ்ரங்தள் தலைவர் யோகேஷ் ராஜ் இன்னும் தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #BulandshahrViolence #ArmymanArrested
    உ.பி. வன்முறையின்போது போராட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்ட இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆறுதல் கூறினார். #BulandshahrViolence #YogiAdityanath
    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் புலந்த்சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அருகில் பசுக்கள் இறந்து கிடந்ததால், அங்கு பசுவதைக் கூடம் செயல்படுவதாக கூறி இந்து அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக் குழுவினர் தாக்குதல் நடத்தினர். போலீசார் தடியடி நடத்தியும், துப்பாக்கி சூடு நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர்.

    இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் சிங் கொல்லப்பட்டார். அவர் மீது போராட்டக் கும்பல் கற்களை வீசி தாக்கியதும், துப்பாக்கியால் சுட்டதும் தெரியவந்து. வன்முறை தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.



    இந்நிலையில், புலந்த்சாகர் வன்முறையில் கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் சுபோத் சிங்கின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர், அவர்களின் குடும்பத்திற்கு அரசு தேவையான உதவிகளை செய்வதாகவும், அவர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என்றும் உறுதி அளித்தார். முதல்வருடன் டிஜிபி ஓபி சிங் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    புலந்த்சாகர் வன்முறையின்போது இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக டிஜிபி ஓபி சிங் தெரிவித்தார். #BulandshahrViolence #YogiAdityanath

    உத்தரப்பிரதேச அரசின் பொறுப்பற்ற, தவறான கொள்கைகளே புலந்த்சாகர் வன்முறைக்கு காரணம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றம்சாட்டினார். #BulandshahrViolence #Mayawati
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்சாகர் பகுதியில் பசுக்கள் கொல்லப்பட்டதாக கூறி ஒரு கும்பல் திடீர் போராட்டம் நடத்தியது. இதில் வன்முறை ஏற்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உ.பி.யில் பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.


    இந்த வன்முறைக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக அரசாங்கத்தின் பொறுப்பற்ற மற்றும் தவறான கொள்கைகளால் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்டதாகவும், மற்றொரு நபர் இறந்ததாகவும் அவர் கூறினார். அத்துடன், இங்கு ஒரு அரசாங்கம் உள்ளது என மக்கள் உணரும் வகையில், வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மாயாவதி வலியுறுத்தினார்.

    வன்முறையில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாயாவதி, கும்பலாக சேர்ந்து தாக்குவதை தடுக்க சட்டத்தின் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார். #BulandshahrViolence #Mayawati
    ×