search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புமியோ கிஷிடா"

    • ஜப்பான் அனுப்பிய ஸ்லிம் விண்கலத்தின் லேண்டர் வாகனம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
    • அமெரிக்கா, சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரையிறங்கி சாதனை புரிந்துள்ளது.

    புதுடெல்லி:

    ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) நேற்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது.

    இதன்மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதனை புரிந்துள்ளது.

    இந்நிலையில், நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறக்கிய ஜப்பானுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதனை படைத்த ஜப்பான் விண்வெளி ஆய்வு மையம் மற்றும் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு வாழ்த்துக்கள். விண்வெளி ஆராய்ச்சியில் ஜப்பானுடன் இணைந்து பணியாற்றுவதை இஸ்ரோ எதிர்நோக்கியுள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • பயண ரத்துக்கான காரணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை.

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இந்தியாவில் நடக்கும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு ஒரு நாள் பயணமாக செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் ஜப்பான் பிரதமரின் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது பயண ரத்துக்கான காரணம் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

    சமீபத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் அப்பயணம் தள்ளி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜப்பானின் ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
    • இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    புதுடெல்லி:

    ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறை பயணமாக இன்று இந்தியா வருகை தரவுள்ளார். 2 நாள் பயணமாக இந்தியா வரும் அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவுள்ளார்.

    இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட இரு நாட்டுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

    குறிப்பாக இந்தோ - பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்பாக முக்கியம் திட்டம் அறிவிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜி20 தலைமை பொறுப்பை இந்தியாவும், ஜி7 தலைமை பொறுப்பை ஜப்பானும் ஏற்றுள்ள நிலையில், இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருந்தப்படுகிறது.

    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.
    • வரும் 20ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    புதுடெல்லி:

    ஜி7 மற்றும் ஜி20 ஆகிய அமைப்புகளின் மாநாடு நடக்க இருக்கிறது.

    இந்நிலையில், வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை தருகிறார்.

    இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கார் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

    பிரதமர் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று சந்தித்தார்.
    • இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்க, ஜப்பான் கூட்டணியில் நமது முதலீடு பெரும் ஈவுத்தொகையை அளிக்கிறது. தேசிய பாதுகாப்பு முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை. மேலும் இது இன்னும் பல ஆண்டுகளாக தொடரும்.

    ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்காவுடன் உறுதியான நட்பு மற்றும் நண்பராக இருந்து வருகிறார். அவருடன் அமர்ந்து, இந்தோ-பசிபிக் மற்றும் உலக நாடுகள் ஆகிய இரு நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த நாம் எவ்வாறு இணைந்து செயல்படுகிறோம் என்று விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் வரும் 13-ம் தேதி சந்தித்துப் பேசுகிறார்.
    • இருவரும் உக்ரைன், ரஷியா போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    வாஷிங்டன்:

    ஜப்பான் நாடு தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த 1-ம் தேதி ஜப்பானை நோக்கி குறுகிய தூர பாலிஸ்டிக் ரக ஏவுகணையை ஏவி சோதித்தது வடகொரியா. இதையடுத்து நடந்த ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் பேசிய வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணு ஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க உத்தரவிட்டார். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நீடிக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ம் தேதி நேரில் சந்தித்துப் பேசுகிறார்.

    இதுதொடர்பாக, வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் வருகையை அதிபர் ஜோ பைடன் எதிர்நோக்கி காத்து இருக்கிறார். இந்தச் சந்திப்பில் எங்களுடைய இரு அரசாங்கங்கள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நாட்டு மக்களின் உறவுகளை ஆழப்படுத்துவதற்கான ஆலோசனை நடத்த உள்ளனர். இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும், சர்வதேச அளவில் நிலவி வரும் பருவநிலை மாற்றம், வடகொரியா, சீனாவை சுற்றி நிலவும் பாதுகாப்பு தொடர்புடைய விவகாரங்கள், உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்த உள்ளனர் என தெரிவித்துள்ளது.

    • சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.
    • அனைத்து சீன பயணிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என ஜப்பான் அரசு கூறியது.

    டோக்கியோ:

    சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில், சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக பிரதமர் புமியோ கிஷிடா கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் சீனாவில் இருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அறிகுறி அல்லது கொரோனா உறுதியானால் அந்த நபர் தனிமைப்படுத்தப்படுவார் என தெரிவித்தார்.

    புத்தாண்டு கொண்டாட்டத்தால் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ ஷிகிடா கொரோனா தொற்றில் இருந்து விரைவில் நலம்பெற்று ஆரோக்கியமாக மீண்டுவர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    • உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
    • ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    டோக்கியோ:

    2020-ம் ஆண்டு கொரோனா தீவிரமாக பரவத்தொடங்கியபோது, பதறிக்கொண்டே கட்டுப்பாடுகளை விதித்த நாடுகள் இப்போது அந்த கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை.

    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு லேசான அறிகுறிகளுடன் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

    இதனைத்தொடர்ந்து, புமியோ கிஷிடா தனிமைப்படுத்தப்பட்டு தற்போது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார் என பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×