search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பொழிவு"

    • மானாமதுரை அருகே அரசுப் பள்ளிக்கு வர்ணம் பூச தலைமை ஆசிரியர் ரூ.1லட்சம் வழங்கினார். இதனால் கட்டிடங்கள் புதுப்பொலிவு பெற்றன.
    • சுவர் முழுவதும் கீறல்கள், கிறுக்கல்களால் அலங்கோலமாக காட்சியளித்தன.

    மானாமதுரை,

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் தாலுகாக்களில் 136 தொடக்கப்பள்ளிகளும், 19 உயர்நிலைப்பள்ளிகளும், 16 மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.

    அரசு பள்ளி கட்டிடங்கள் பலவும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளி கட்டிடங்களை பராமரிக்க போதிய நிதி ஒதுக்கப்படுவதில்லை. கட்டிடங்களை மராமத்து செய்ய ஆசிரியர்களும் எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

    மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 150 மாணவ-மாணவிகளும், 10 ஆசிரியர், ஆசிரியைகளும் பணிபுரிந்து வருகின்றனர். 1996-ல் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது ஆய்வு கூடம் உள்ளிட்ட 6 கட்டிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. கட்டிடங்கள் பலவும் சேதமடைந்து வர்ணம் இழந்து காட்சியளித்தன. சுவர் முழுவதும் கீறல்கள், கிறுக்கல்களால் அலங்கோலமாக காட்சிய ளித்தன.

    கடந்த மார்ச் மாதம் அருண்மொழி (வயது47) என்பவர் தலைமையாசிரியராக பொறுப்பேற்றார். அவர் பள்ளி கட்டிடங்களை பராமரிக்க முடிவு செய்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் அளித்தார். பின்னர் பெற்றோர், ஆசிரியர் கழகம் மூலம் ரூ.1 லட்சம் நிதி திரட்டி பள்ளி கட்டிடங்களை அனைத்தையும் புதுப்பித்து வர்ணம் பூசி புதுப்பொலிவு பெற செய்தார்.

    30 வருடங்களுக்கு மேலாக பாழ்பட்டு கிடந்த கட்டிடங்கள் புதுப்பொ லிவுடன் காட்சியளிப்பது மாணவ-மாணவியர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

    மேலும் பள்ளி மாணவ- மாணவியர்களின் தனித்திறனையும் ஊக்குவித்து பல போட்டிகளில் வெற்றி பெற செய்துள்ளார். பள்ளியில் மாணவர்களுக்கு என தனியாக அமைப்பு உருவாக்கி அதன் மூலம் பள்ளி வளாகங்களில் 50-க்கும் மேற்ப்பட்ட மரங்களை நட்டு ஒவ்வொரு மரத்திற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர் சூட்டி தினசரி அவர்கள் மரத்திற்கு தண்ணீர் ஊற்றி வளர்க்க செய்து வருகிறார்.

    பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் பூசியதுடன் சுவர்களில் பொன்மொழி களையும் எழுதி வைத்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்கது 'அறம் செய்ய விரும்புவதை விட மரம் செய விரும்பு' என எழுதி இருப்பதுதான்.

    தலைமை ஆசிரியரின் இந்த முயற்சிக்கு அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×